Friday, 1 July 2011

ராவணன்...!!!

ராவணன்...!!!
by Ranjani Bala on Thursday, June 24, 2010 at 12:09am

ராவணன்.......:
மணிரத்தினம் படம் ...சுகாசினி கதை வசனம் ..வைரமுத்து பாடல் ..இசை .. ரஹ்மான் ..
இனி கதைக்கு வருகின்றேன் ..இராமாயணத்து ராவணனையும்... சீதாவையும் ..ராமராக பிரிதிவிராஜ் ..
அனுமனாக கார்த்திக் ..அதற்காக அவரை குரங்குபோல் தாவ விட்டிருக்கின்றார் ..கதாசிரியர் ..இராவணன் ..விக்ரம் ..என்றும்போல் நன்றாக நடித்திருக்குறார்..என்றாலும் .அவரை முழுமையாக கையாள வில்லை ..அஷ்வர்யாறாய்..சீதாவாக ..அழகாக கண்கள் கதை பேசுகின்றது ..சீதாவை கவர்ந்து செல்லும்போதும் சரி சிறை வைத்திருக்கும் போதும் சரி ..கம்பர் காவியம்போல் விக்ரம் கைகூட படவில்லை ..கார்த்திக் சீதாவை கண்டு பிடிப்பது ப்ரித்வியிடம் சொல்வது ...இராவணன் தம்பி தூது போவது ...இப்படி ராமாயணத்து பாத்திரங்களை உதவிக்கு அழைத்திருக்கின்றார் ...கடைசியாக ராமர் சீதாவை சந்தேகிப்பதை இங்கேயும் சந்தேகிப்பது போல் சொல்லி அதற்கு ராவணனைக்கொண்டே வேறு காரணமாக இருக்கும் என அர்த்தமும் சொல்ல முனைந்துள்ளார்...

கதை எங்கே தொடங்கியது ..பிரியாமணியை எதற்காக கொண்டு சென்றார்கள் ..எதற்காக ..தாலி கட்ட வந்தவன் .ஓடி ஒழிந்தது ..கதையில் நிறையவே குழப்பங்கள் ....

ஒன்று மட்டும் நல்லா இருந்தது ..ஒளிப்பதிவு ..சந்தோஷ்சிவனின் கமரா நன்றாகவே சுழன்றது ..அஷ்வர்யாராய் ..கவிதை ..முதல் தொடக்கத்தில் அவர் விழுகின்ற அழகு கவிதை ...விக்ரமின் நடிப்பு முழுமையா காட்ட வில்லை ..
பாடல் இரண்டு மட்டுமே அழகு ....நேரில் கேக்கும் அழகு திரையில் இல்லை ...
மணிரத்தினம் என்றால் எதிர்பார்ப்பு இருக்கும் ..ஆனால் இதில் பழைய மணிரத்னத்தை பார்க்க முடியவில்லை ..
ராமாயணத்தில் ..வால்மீகி வடக்கு பக்கம் நடந்தார் ...கம்பர் தெற்குபக்கம் நடந்தார் ...அனால் மணிரத்தினம் எங்கே நடப்பது என்று திண்டாடியது போல் இருந்தது .....

என்பார்வையில் ஒளிப்பதிவில் ..இருந்த அழகு கவிதை ..கதையில் இல்லை ...
உங்கள் பார்வையில் நன்றாக இருந்திருக்கும் ..எல்லார் பார்வையும் மனங்களும் ஒன்றல்ல...
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன் ......

அன்புடன்
b r .ரஞ்சனி ..

No comments:

Post a Comment