Wednesday, 17 February 2016

என்னுள் புதைக்கப்பட்ட இரகசியங்கள் உன் நினைவுகளே
சுமை..... கல்லறை நோக்கி பயணிக்கும் கவிதை ஒன்று நினைவுகளை சுமந்து கொண்டு பிறக்கும் போதும் சுமை இறந்த பின்பும் சுமை கல்லறை மீது பொறிக்கப்படும் அவள் நினைவு தடையங்கள் மக்கி விடும் மெய் (உடம்பு ) இறந்த பின்னும் உயிர் ஊட்டியவண்ணம் வாழுகின்ற உயிரினதுக்காய் வாழ்ந்த பின்பும் சுமக்கும் சுமை கல்லறை மீது பொறிக்கப்பட்ட நினைவு சுமை மட்டுமே
மலர்ந்த நாளில் .....! மலர்ந்த நாளில் துரத்தும் மரணம் நம்பிக்கை இப்போ மரணப்பிடியில் வாழும் வாழ்வு மற்றவர் கையில் பாசம் என்பது பாசக்கயிறு போல் கழுத்தை இறுக்கியவண்ணம் மரண தண்டனை கிடைத்திருந்தால் ஒரு நொடியில் விடுதலை அடைந்திருப்பேன் ஆயுள் தண்டனை தந்ததனால் அழுகையே என் விதி ஆண்டவன் விதித்துவிட்டான்
முருகா ...முருகா... முருகா ...முருகா... எங்கள் செல்ல முருகா எங்கள் குறை தீர்கும் நல்ல முருகா.... குமரா ... குமரா... எங்கள் கனடா குமரா நல்லவினை செய்திட வருவாய் குமரா ... கந்தா.... கந்தா .... எங்கள் கருணை கந்தா கருணை காட்டி எம்மை காத்தருள்வாய் கந்தாய்...
கபிலேஷ்வர் இசைப்பயணம் இசையில் எனது பாடல் : பல்லவி : என் உயிரே... என் உயிரே ....(பெண் ) என் உயிரில் நீ பாதி ...... என் சகியே ..என் சகியே ...(ஆண்) என் உணர்வில் நீ பாதி உன்னில் நான் என்னை கண்டேன் (பெண்) என்னில் நான் உன்னை கண்டேன் உன் அழகால் என்னை வென்றாய் நீயடா ..! உன்னில் நான் என்னை கண்டேன் (ஆண்) என்னில் நான் உன்னை கண்டேன் உன் விழியால் என்னை கொன்றாய் நீயடி ...! (என் உயிர் நீயே) சரணம் ....: உன்னை என் நெஞ்சில் சாய்த்தேன் (ஆண்) இடையோரம் கைகள் கோர்த்தேன் இதழோடு இதழும் சேர்த்தேன் கவியோடு சுவையும் கண்டேன் உன்னை என் உயிரில் வைத்தேன். (பெண்) மனசோடு மனமும் கோர்த்தேன் கனவோடு நனவில் கலந்தேன் சுவையோடு இனிமை கண்டேன் உன்னாலே ...உன்னாலே...நான் மலர்ந்தேன். (ஆண்) கண்ணாலே ...கண்ணாலே..நான் துலைந்தேன் கள்ளாலே .. கள்ளாலே...நான்..தவித்தேன். (பெண்) உன்னாலே..உன்னாலே...எனை மறந்தேன் உன் மார்பினில் நான் புதைந்தேன் (ஆண்) உன் ஸ்பரிசம் நான் கண்டேன் உன் இதழில் நான் இதழ் பதித்தேன் என் இதயம் நீ துலைத்தாய்....! or இதயம் தொட்டேன் இனிமை கண்டேன் என் பருவம் ... நான்.. கண்டேன் இணுவையூர் (inuvaiyur) B.R.Ranjani (Canada)
ஆழம் பார்ப்பதும் அள்ளி அணைப்பதும் சந்ததி வளர்க்கும் அன்றாட நிகழ்வு ஸ்பரிச சுகத்தில் உஷ்ணம் காணுதல் நாளை விடியலில் வித்து தோன்றுவதற்கே இச்சை காணும் மனித சுகத்தில் இயங்கும் உலகு நன்மையே பெறும் .
முள்ளிவாய்க்கால் காணொளி நேற்றைய தினம் என்னுள்ளே நெருக்கி தள்ளியதாய்... சுழன்று கொண்டே என்மனசு மாறாத துன்பத்துள் ... இயலாமை என்னிடத்தில் கனத்துப்போனதாய் ... வாழுகின்ற காலம் அர்த்தமே காணாது .. அற்பத்து ஆசைகளுக்காய் அடிபணிந்து போனதாய் ... இயற்கை இச்சைகளுக்கு விற்கப்படும் அடிமைகளாய் சை ..நாசமாய் .!!போனபுழைப்பு..!
வானுக்கும் மண்ணுக்கும் நடைபெறும் பந்தயத்தில் முட்டி மோதி தோற்று போவது மனிதம் தான் உருளுகின்ற காலசக்கரத்தில் அடிபட்டு போகும் உணர்வு காலுக்குள் நசுங்கியதாய் வலி கொண்டு மாழும் நகருகின்ற நினைவு நகராமல் நிற்பதும் வாழ்வியல் மாற்றத்தில் நிரந்தர நிகழ்வாச்சு
என் முகவரி கேட்டபோது அவர்களிடம் சொன்னேன் உன்னிடம் கேட்கச்சொல்லி..., என் முகவரி இருக்கும் இடம் உன் இதயம் தானே ....!!
உன்னுடன் பேசட்டும் இருள் கனத்த மழைத்துளியில் கலந்து விடுகின்றது நீ விடும் கண்ணீர் கனத்து விட்ட உன் சுமை தனித்து விட்ட உன் வெறுமை இந்த இருளைப்போல் கனத்து போகும் உன் வலி காற்றுடன் பேசும் தளர்த்திவிடு உன் ஆடையை உன்னுடன் பேசட்டும் இருள்