Wednesday, 17 February 2016

கபிலேஷ்வர் இசைப்பயணம் இசையில் எனது பாடல் : பல்லவி : என் உயிரே... என் உயிரே ....(பெண் ) என் உயிரில் நீ பாதி ...... என் சகியே ..என் சகியே ...(ஆண்) என் உணர்வில் நீ பாதி உன்னில் நான் என்னை கண்டேன் (பெண்) என்னில் நான் உன்னை கண்டேன் உன் அழகால் என்னை வென்றாய் நீயடா ..! உன்னில் நான் என்னை கண்டேன் (ஆண்) என்னில் நான் உன்னை கண்டேன் உன் விழியால் என்னை கொன்றாய் நீயடி ...! (என் உயிர் நீயே) சரணம் ....: உன்னை என் நெஞ்சில் சாய்த்தேன் (ஆண்) இடையோரம் கைகள் கோர்த்தேன் இதழோடு இதழும் சேர்த்தேன் கவியோடு சுவையும் கண்டேன் உன்னை என் உயிரில் வைத்தேன். (பெண்) மனசோடு மனமும் கோர்த்தேன் கனவோடு நனவில் கலந்தேன் சுவையோடு இனிமை கண்டேன் உன்னாலே ...உன்னாலே...நான் மலர்ந்தேன். (ஆண்) கண்ணாலே ...கண்ணாலே..நான் துலைந்தேன் கள்ளாலே .. கள்ளாலே...நான்..தவித்தேன். (பெண்) உன்னாலே..உன்னாலே...எனை மறந்தேன் உன் மார்பினில் நான் புதைந்தேன் (ஆண்) உன் ஸ்பரிசம் நான் கண்டேன் உன் இதழில் நான் இதழ் பதித்தேன் என் இதயம் நீ துலைத்தாய்....! or இதயம் தொட்டேன் இனிமை கண்டேன் என் பருவம் ... நான்.. கண்டேன் இணுவையூர் (inuvaiyur) B.R.Ranjani (Canada)

No comments:

Post a Comment