Thursday, 30 June 2011

தையல்...!!!மையல்!!!

தையல் (பெண் )விடுகின்ற மையல் .பார்த்து .
மாத தை இவளுக்கு பொறாமையா... என்ன....?
காரணம் :---
மைவிழி மயக்கம் கொண்டு மானிடை மனிதரை ..
மையல் கொண்டு வீழ்த்துகின்ற மான் விழி உனக்கென்று ...??

என்ன சுகம்...... என்ன சுகம்......!

அப்பன் ஆகுதல் என்ன சுகம் ....
முக்குதல் முனகுதல் எல்லாமே பெண்ணுக்கு....
மெல்லுதல் முறுக்குதல் எல்லாமே ஆணுக்கு ...
பிள்ளை பெறுதலை சாதனை என்பதும் ...
அப்பன் ஆகுதல் அதைவிட மேல் என்றும் ..
அடுக்கடுக்காய் சொல்லிடும்...
ஆண்மை மிகுந்த ..தலைவன் இவன் ...!!

ஆக:-- அப்பன் ஆகுதல் என்ன சுகம் என்ன சுகம்......!!

கண்மணியே ..!!

சொல்லுக்குள் சிக்கிவிட்ட உன் முகம் கண்டு ...
சொல்லாமல் சிக்கிவிட்டேனடி .....கண்மணியே .....!!
இதயத்தில் சிதறிவிட்ட உன் முகம் கண்டு .....
இதயம் சிலிர்த்துவிட்டேனடி ..கண்மணியே ...!!
கண்ணுக்குள் தொலைத்துவிட்ட உன் முகம் கண்டு ..
கண்ணையே தொலைத்து விட்டேனடி ..கண்மணியே ..!!

என் நெஞ்சம் தொட்ட காவியமவள்..!!!

கம்பன் எழுதிய காவியமும் அல்ல .
பாரதி பாடிய புதுமையும் அல்ல
கண்ணதாசன் இயற்றிய கவிதையும் அல்ல ..
ரவிவர்மன் தீட்டிய ஓவியம் அல்ல
வள்ளுவன் சொல்லிய குறளும் அல்ல
ஆனால் ....................அவள் .................!!
நான் வரைந்த செல்லம் இவள்
என் நெஞ்சம் தொட்ட காவியமவள்..!!!

Tuesday, 28 June 2011

வாழ்க தமிழ் ..

செந்தமிழ் ஓடையில் எம் சித்தனை ஓடவிட்டு ..
சந்தக்கவி ஆற்றினில் தமிழ் மொழி நனையவிட்டு ..
சகோதரர்கள் நாம் ஆர்பரிக்கும் நேரமிது ......
தூயதமிழ் பேசிடவும் ..
தமிழ் மரபை பேணிடவும்..
தமிழோடு கூடிநின்று தமிழிசை பாடும்..
அழகான மிக ஆனந்தமான நேரமிது .

வாழ்க என்ற முழக்கத்துடன் ...
வார்த்தைகூட்டி..மங்களம் பேசி ..
பைந்தமிழ் சேர்த்து கவிபல பாடி..
அண்டை நாட்டில் எம்மொழி காத்து ...
நலியும்தமிலை தேறுதல் படுத்தி ......
விழுகின்ற தமிழுக்கு கைகொடுத்துதவி ..
கட்டை ஒன்றினால் முட்டுக்கொடுத்து ..
தமிழை பேணிடவும்..வளர்த்திடவும் ..
தமிழர் நாம் ஒன்றினைவோம் ...வென்றிடுவோம் ..
எம்தமிழை காத்திடுவோம் ....
வாழ்க தமிழ் ..வளர்க என்றென்றும் .......
நீடூழி...!! நீடூழி!!

அழகு இளமையில் மட்டுமல்ல ....!!!

by Ranjani Bala on Tuesday, June 22, 2010 at 12:13am

அழகு இளமையில் மட்டுமல்ல ....!!!

நேற்றையதினம் அந்திபொழுது நேரம் ..அழகான மஞ்சள் வெயில் ..நான் எனது வாகனத்தில் .வீடு நோக்கி
வந்துகொண்டிருந்தேன் .அருகே வந்துகொண்டிருந்த வண்டி ஒன்றில் ஒரு வயோதிப மாது ..எழுபத்தி ஐந்து வயதிருக்கும் ,அழகான மாது ஆசிய நாட்டை சேர்ந்தவர் ..நேர்த்தியான நாசி அழகான அதரங்கள்
முடியை கழுத்தோடு வெட்டியியிருந்தார்.மிகவும் கவர்சிகரமான முகவாகு ..சேலை அணிந்திருந்தார் ..
மிக நேர்த்தியாக வாகனத்தை செலுத்தினார்.கைகளில் சிறு தளர்ச்சி இருந்தாலும் வாகனம் ஓடுவதில் நடுக்கம் இல்லை .
இத்தனையும் பக்கத்தில் இருந்தபடி பாத்துக்கொண்டு வந்தேன் ..அவர் வாகனம் செலுத்துகின்ற வேகத்தோடு நானும் சேர்ந்து அதே வேகத்தில் ...
அந்த முதாட்டி இடை இடையே முகம் பார்கும் கண்ணாடியில் தன்முகத்தை பார்த்து அழகு பார்த்தார் ..
அந்த அழகு எனக்கு ரொம்பவே பிடித்தது ...இரண்டு கன்னங்களையும் திருப்பிபார்த்தார் ..அதரங்களை தொட்டு பார்த்தார் , அழகாக இருந்தது ..என்னோ ஒரு நம்பிக்கை அந்த மூதாட்டிக்கு அழகு தான் என்பதில் அசைக்க முடியா
நம்பிக்கை என்று நான் நினைக்கின்றேன் ,,,
அவரின் செய்கை எனக்கு அதைத்தான் நினைவுக்கு கொண்டுவந்தது .நாம் எமக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அழகு போய்விடுமா ..? என்று பலநேரம் பயந்துவிடுவோம் ..அனால் இவரை பார்த்தபின்பு நினைத்தேன் ..அழகு என்பது வயதில் அல்ல நாம் செய்கின்ற செயலில் இருக்கின்றது என்று ...
இத்தனைக்கும் அவருக்கு தெரியா தன்னை நான் பார்த்தேன் என்று ....பத்து நிமிடங்கள் இருக்கும்
என் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தார் ...அவரை அறியாமலே அவரின் அழகில் நன் மலைத்து விட்டேன் ..இத்தனைக்கும் இடையில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்தார் என்று நினைக்கின்றேன் ..மெதுவாக தலை அசைத்து ரசித்ததை காண கூடியதாக இருந்தது ..எதோ ஒன்று அந்த பாட்டியிடம் என்னை ஈர்த்து கொண்டதுதான் உண்மை
இத்தனை வயதில் எமது ஆசிய மாதர் தங்களால் ஒன்றும் முடியாது என்று ஒதுங்கிக்கொள்ளும் இடத்தில் இவரின் திறமை என்னை கவர்ந்து கொண்டதில் வியப்பில்லை எனலாம் ..
ஆக இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளனும் என்ற அவாவில் ..இங்கே தந்துள்ளேன் ..

நன்றியுடன் ..
B . R . ரஞ்சனி .

நான்கூட....???

கால மாற்றத்தில் காணாமல் போகும் நிஜங்கள் ..

காற்றோடு காற்றாய்.......!!

காத்திருந்தேன் காலமாய் கனவுகள் நிஜமாக ...!!
...
காலநிலை மாற்றத்தில் காலத்தோடு கனவாகி .....!!

காலசக்கரத்தில் காணாமல் ..........நான்கூட....???

பெண்களுக்கான கலாச்சாரமோ ..??

அழுவதை நீ காணவென்று...?
கண்ணீரை விட்டேனா இன்று..?
ஆசையாய் பெற்ற அன்னை .
அழுவென்று சொல்லிபோனாள்..
ஏனடா ..இவள் கண்ணில் ...
கண்ணீர்தான் தினம் என்று..
கடவுளா கேக்கபோறான் ..
பிறப்பில் அழுவதும் ..
பிறந்தபின் அழுவதும் ..
பெண்களுக்கான கலாச்சாரமோ ..??

நீயும் நானும்கூடத்தான்!!!...

உன் கண்ணுக்குள் அசையும் கருமணிக்குள்....
என் கற்பனைகள் கரைகின்றன ...!!
கற்பனைகள் மட்டுமா.....????
நானும்கூடத்தான்...............

உன் பார்வையில் தெரிகின்ற கவிதையில் ...
என் கனவுகள் அடிபட்டு போகின்றன ....!!
கனவுகள் மட்டுமா ..???
நானும்கூடத்தான்...............

நீ விடுகின்ற சுவாசபெரும்மூச்சில்...
என் மனக்கோட்டைகள் மண் கவ்வுகின்றன ....
மனகோட்டைகள் மட்டுமா ..???
நானும்கூடத்தான்...............

உன் உதடுகள் அசைக்கும் உச்சரிப்பில் ....
என்கவிகள் கானம் இசைகின்றன....!!!
கானம் மட்டுமா .....???
நானும்கூடத்தான்...............

நீ என்னை அணைக்கும்போதெல்லாம்...
என் உள்ளம் உவகை ஊற்றால் மகிழ்கின்றன ..!!!
அவைமட்டுமா ....???
நானும்கூடத்தான் ...

நீ என்னை உன்னுள் சிறைபடுத்தும்போது ....
நம் இதயங்கள் காணமல் போகின்றன ....?
இதயங்கள் மட்டுமா ...???
நீயும் நானும்கூடத்தான்!!!...

கல்வி ...!!!

படித்தால் மதிப்பர் ....
படி படி .....என்றனர் ...
நானும் படித்தேன்..
மிக நன்றாக ....!!!!!!
ஆம் .....
மதித்தேவிட்டனர் .....
பத்து லட்சமென்று...!!!!!!!!!!!1

காலம் வாழும்வரை...!!!

கல்லூரி வாழ்க்கை அதில் மகிழ்ந்திட்ட இனிமை
அது நிலைத்திடாதா ...?? என்றென்றும் ..???
கனவுகள் காணாமல் போக ...சோகங்களே .....நனவாக ...!!!
கால சறுக்கலில் கல்லும் முள்ளுமே நிஜங்களாக....
காலம் வாழும்வரை காலைக் கடித்தபடி .....!!!!

என் மௌனம் பேசவிலையேதவிர...!!!. உன் கவிதைகள் என்கூடவே.....!!!

விமர்சங்கள் கூட என்னுள் மௌனமாக ... ..காரணம் ...
எங்கே....!! அது என்னை.... !!! தாக்கிடுமோவென்று..???
அதனால் விமர்சங்கள் என்னுள்ளேயே ...!!!
மௌனமாக மனத்தோடு புதைத்துக்கொண்டேன் ...
என்றாலும் விமர்சங்களால்தான் குறைகைகளை..தகர்த்திகொள்ளமுடியும்....
விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டும்..ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் .
ஆனால் ...!! ஆனால் ...!!
அது விமர்சங்கள் அவர்கள் ஆக்கங்களோடு விளையாடவேண்டும் ...
அவர்கள் உணர்வோடு அவர்கள் வாழ்வோடு விளையாடக்கூடாது ...

எனக்குள்ளே ஒரு கேள்வி ....??
நான் என்ற கேள்வி என்னுள்ளே எழுவதை ..
என்னுடனேயே புதைக்கவேண்டுமா ....??
இதுவெல்லாம் ....நான் என்ற மமதையல்ல...!!

என்னை யார் என்று சொல்வதற்கு என்னையே ...
அறிமுகப்படுத்தும் அடைமொழி ....
அடையாளம் ....!! என்னுள்ளே ஒரு உறுதி ..
நான் நான்தான் (confident )

ஒருவன் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்தான் ...
ஆனால் அவன் தனித்து மற்றவர்களிடம் இருந்து தெரியவேண்டுமானால் ..
உனக்கென்று ஒரு அடையாளத்தை தனித்து தெரியபடுத்து ..அதனை ..
தொடர்ந்து தக்கவைத்துகொள் ...ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் ...

இது தற்புகழ்ச்சி அல்ல ...!!
நீ ஒரு வேலைக்கு மனு கொடுக்கின்றாய் ...!!
அப்போ உனைப்பற்றி ஒரு முகவுரை தேவைபடுகிறது.....காரணம்..
அவர்கள் உனைப்பற்றி அறிந்து கொள்ள அது இலகுவாகவும் உனைப்பற்றி அறிந்து கொள்ளவும் முடிகிறது ...
அது நீயே கூறியதாக இருக்கவேண்டும் ...

இதற்குபோய் மற்றவர்களிடம் என்னை பற்றிகூரியதை கொண்டுசெல்ல முடியுமா ...?
எல்லாவற்றிக்கும் இதை சொல்லவில்லை ...இப்படி செய்வதும் தவறு அல்ல ...!!

இதனையும் என்மனத்திடை கொட்டிக்கிடந்தவைகள்தான்..!!
யாரையும் சுட்டிக்காட்டவில்லை ....!!

நன்றியுடன் ...
B R ரஞ்சனி ..

அழகுடனே ..!!!

என் சிந்தனை உன்னை சிறை பிடித்து ....
உன் உள்ளத்து உணர்வுகள் வடம்கொண்டு...
கள்ளத்தனத்துடன் இழுத்துவிட ...
நீயும் என்னவளாய் ....அழகுடன் அசைந்தாடி ...
நான் இழுக்கும் இடமெல்லாம் என்னுடனே ....!!!!
மனத்தில் நகர்வலமாய்.....!!! நலங்கு சேர்த்தபடி !!!
தரிசனமும் தந்து நலமாக என்னை அழகுடனே ...................????

வளமிகு காதல் ..!!!

தாழ்ந்தவர் உயர்ந்தவர் ....
தரமெல்லாம் பார்க்காது ...
வாழ்பவன் இனத்தை மட்டும் ...
தனக்கு இசைவாய் ...பார்க்கும் ...காதல் ....

மண்ணும் பொன்னும் மாயமான உலகிற்கு ...
அன்பும் பாசமும் அழகான உலகிற்கு ....

குணமே குலம்காக்கும் ...குணத்தொருகாதல்..
வளமே வளம்காக்கும்.. வளமிகு காதல் ...

குணமே குலமாக இனமே இனிமையாக ...
குறைவில்லா இருப்பதுவே ....குறை கூறாகாதல்

காதல் ....!!!

வாடல் துளியின்றி வளர்ந்து விட்ட காதல் ..
ஊடல் துளிவந்து மறந்து விட்ட காதல் ....
சாதல் காட்டாது தளிர்த்து விட்ட காதல் ..
கூடல் துளிர்விட்டு துவண்டு விட்ட காதல் ...

ஆடவர் பெண்கள் நயந்து வியக்கும் காதல் ....!!!
ஆசை விஞ்சி அழகிழந்து போனதுவோ ...?

காணக் கவியசைவில் கண்கொள்ளா காதல் ..
காமுக பார்வையிலே அடிபட்டு போனதுவோ ...??

பூவை இவள் என்பான் .....பாவை அவள் என்பான் ....!!
சூரியன் இவன் என்பாள்... சோதிடனும் இவன் என்பாள் ...!!

காலத்து வேகத்தில் கக்கிவிடும் வார்த்தைகள் ...
காலச்சருக்களில் காணாது போய்விடுமோ ...??

சொன்னது பொய்யோ ...?? சொல்லாதது மெய்யோ...??
காலத்தின் பக்கம் பதில் தேடி தரவேண்டும் ....???????????????

வாழ்த்திடுவோம் ...!!!

முகம் எனும் புத்தகத்து ...முத்துக் குழந்தை நாம் ..
நாளை உன் பிறந்தநாளாம் ...உன்னை நாம் வாழ்த்த வேண்டாமா ...?

அணைத்துகொண்டோம் ...நாமும் உன் நண்பர்களாக ...
மறந்துவிடாது உன்னை வாயார வாழ்த்திடுவோமே...

நாவில் நலம்சொல்லி நயமான நல்சொல்லில் நலமாக வாழ்த்திடுவோம் ..

புன்னகை பூத்துநின்றாய் புதுமலராய் மலர்ந்து நின்றாய் .....
காணும் யாவரையும் கண்ணுக்குள் அணைத்து நின்றாய் ....
உறவுக்கு பாலம் போட்டு உறவுதனை வளர்த்து நின்றாய் ...

பாசங்கள் நேசங்கள் கோபங்கள் தாகங்கள் .......
பஹிர்ந்துகொள்ளும் புத்தகமாய் ......
எம்மோடு வாழ்ந்து நின்றாய் ....

எம் கனவுகள் கற்பனைகள் வளர்த்தெடுக்கும் நண்பனாயும்...
பல உருவம் எடுத்து நின்றாய் ....

ஆகா ...உன்னை .....வாழ்த்த ......
கவிமலர் வார்த்தை கொண்டு அழகாக வாழ்த்திடுவோமே ...
வாழிய வாழியவென ...உன் பாலம் தொடர்ந்திட தொடர்ந்து வாழ்த்திடுவோம் ...!!

உன் நினைவுகள்...!!!

உன் அனுமதியின்றி .....
என் உள்ளத்தடாகத்தில் ....
நீச்சலிட்டு எழுகின்ற...
உன் நினைவுகள் ...
என்றுமே ......
கரையை தொட்டதில்லை ...???

மின்னல் ...!!!

ஒற்றை வரி கவியில்...
ஒரு மின்னல் ...
அந்த மின்னலே நீதானே ....!!

உணர்வுகளிலே ....!!

நீ போடுகின்ற முடிச்சுகளெல்லாம் ..!
என்னை பேசமுடியாமல் செய்வதற்கே ...!!
காரணம் .....??
நீ போடுவது என்கழுத்தில் அல்ல ...!
என் மன உணர்வுகளிலே ....!!

வலைக்குள்கூட....!!

நீ வீசுகின்ற கண்கள் வலைக்குள்கூட....!!
என்னால் சிக்கமுடியவில்லையடி....!!
நீ வீசுக்கிற இடங்களெல்லாம் ....!!
என்னைவிட்டு தள்ளியே ...!!!

அழகாய்தானடி...!!!

உன் தொண்டை குழிக்குள் ...
சிக்கித்தவிக்கின்ற ....சிரிப்புகூட ...
அழகுதானடி ......!!
அதுமட்டுமா...???
உன் வாய்க்குள் விக்குகின்ர ..
அழுகைகூட அழகாய்தானடி....!!!!!!!

வார்த்தைகள் கூட....!!!

நீ ....!!.
உன் இதழ்களை....
குவிகின்ற அந்த அசைவினுள் ....!!
உன் பற்களுக்கு இடையில்
சிக்கித்தவிக்கின்ற வார்த்தைகள் கூட..
எனைக்கண்டதும் ..
வெக்கம்கொண்டு ..பதுங்குவது ஏனோ ...???

புரியாதபுதிர்...!!!

விண்ணுக்கும் மண்ணுக்கும் ...
நடக்கின்ற காலநிலை மாற்றங்கள்கூட .....
நமக்குள் நடக்கின்ற மாற்றங்கள் பார்த்து ...
வியந்து வாய் பிளக்குன்றது......
காரணம் ......??????
நீயும் ...நானும் ...
நடத்துகின்ற காலநிலைகள்...
புரியாதபுதிரென்று...!!!

ஆட்சி செயட்டும்........

உன் நினைவுகளையாவது ....
என்னிடத்தில் விட்டுச்செல் ...!
அவையாவது ....
என்இதயத்தை ஆட்சி செயட்டும்.

நீதானே .....♥ ♥ ♥

நீதானே .....♥ ♥ ♥

கண்ணுக்கும் இமைக்கும் நடக்கின்ற ...

கண்முடி கண்விளித்தல் சத்தத்தில்கூட...

கண்ணுக்குள்... கண்ணான ... நீதானே .....♥ ♥ ♥

ஒரு கவிஞனின் கைகளில் ....!! எனக்கான கருத்தடை சாதனம் ..!

ஒரு கவிஞனின் கைகளில் ....!!
எனக்கான கருத்தடை சாதனம் ..!!

என் விமர்சனங்கள்கூட....!!
என் விருப்பமின்றியே ...!!
கருத்தரிக்க முடியாது ...!!
தடைப்பட்டு போனது ...!!

ஒரு கவிஞனின் கைகளில் ....!!
எனக்கான கருத்தடை சாதனம் ..!!

உணர்வுகள்கூடத்தான்...

உன் வார்த்தையெனும்....
வாளால் .....வெட்டுப்பட்டது...
நான் மட்டுமல்ல...!!!
என் உணர்வுகள்கூடத்தான்...

நெருப்பு ..!!

நானும் நீயும் உரசும்போது ....!!
பற்றாதபோது நெருப்பு ..!!
வார்த்தைகள் உரசியபோது ...!!
பற்றிக்கொண்டது....!!

வார்த்தைகள் நெருப்புத்துண்டங்களாக...!!!
வார்த்தைகளால் பற்றியது ......??
நான் மட்டுமல்ல ....!!!
நீயும் கூடத்தான் .....

நான் கவிஞனாக முடியாதா ...???

ஏன்டா...கிறுக்கா ...!!!
கழிவறையில் கிறுக்கினாயா..?
ஆமாம் ..!!
அப்போதானே நான் கிறுக்கியது
கவிதையாகும் ..
அதுக்காக ....??
இங்கே கிறுக்கினாயா ....???

அப்போ ...???
விட்டிலே கூடாதாம்...!
ஏட்டிலே முடியாதாம் ..!
சுவத்திலேயும் ஆகாதாம் ..!

அப்போ ....நான் ..!!
எங்கேதான் ..கிறுக்குறது ...??
எப்படித்தான் கவிஞாவது ...!!!
முத்தத்து மண்ணிலே கிறுக்கு ...

அது அழிந்து விடுமே ....!!!

அதுக்காக ......!!!!!!

அப்போ.... நான்...!!!
கவிஞனாக முடியாதா .....? :(

இதயம்மட்டும்தான் ..!! ♥ ♥ ♥

நீ அழுதாலும் ...
சிரித்தாலும் ..
ஏனோ ....!!!
காயப்படுவது
என் இதயம்மட்டும்தான் ..!! ♥ ♥ ♥

என்னவளே ...!!!

என்னவளே ...!!!

என்னவளே ...!!!
நான் ஒன்றும் ....!!
உன்னை ...!!
இலவசமாக கேக்கவில்லை ....!!
என்னை உனக்கென்று ....
தத்தம் செய்தபின்தான் கேக்குறேன் ...!!
உன்னை என்னிடம் தாவென்று ......!!!!!!!!!!!

என் உணர்வுகள்தான் ..!!

என் உணர்வுகள்தான் ..!!

விண்ணுக்கும் மண்ணுக்கும்.....
நடைபயிலும் கற்பனையில் ..
விடியல் வரும் என்று....
வீணகிப்போவது... ஏனோ...
என் உணர்வுகள்தான் ..!!

போதுமடா சாமி ....உலகம் புரிந்தது......!

போதுமடா சாமி ....உலகம் புரிந்தது......!

பிறந்தவுடன் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ....?
தவழும்போதும் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ...?
நடக்கும் போதும் பார்த்தேன்...உலகம் புரியவில்லை ...?
படிக்கும்போதும் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ...?

ஆனால் ....................!!

வாழும்போது மட்டும் உலகம் புரிந்தது ...

பாசம் என்று சொல்லி பாசாங்கு செய்திடுவார் ...
நேசம் என்று சொல்லி நெஞ்சத்தே குத்திடுவார் ...
காதல் என்று சொல்லி காமத்தே நின்றிடுவார் ...
வாசம் என்று சொல்லி வாழ்வினிலே துவண்டிடுவர் ..

போதுமடா சாமி ....உலகம் புரிந்தது......!

கலிகால கோலங்கள் ...!!!

கலிகால கோலங்கள் ...!!!

காலத்தின் கோலத்தில் கலிகால கோலங்கள் ...
வீணான கனவு கண்டு வீணாகிப் போறவங்கள் ...
நாளைய விடியல் யாதென்று கேட்பவர்கள் ...
இங்கே.....!!! இங்கே ...!!!

பள்ளி செல்வது பகட்டாக மாறுவதும் ...
பருவத்து தேடல்கள் ..பசியாகிப் போனதுவும் ..
யவ்வனத்து கணவுதனை வீணாகி விட்டதுவும் ...
இங்கே ...!!! இங்கே ...!!!

சிங்கார சினுங்கள்கள் சிலிர்த்திடும் யவ்வனங்கள் ....
மெருகூட்டி வளர்த்தெடுக்கும் புதுமையான நாகரீகம் ...
கண்டறியா சட்டத்தை புதுமையாகப் போற்றுகின்ற ...
வாழை இளம் குமரிகள் ..புதுமை மிகு பெண்டிர்கள் ...
இங்கே.....!!! இங்கே....!!!

பிள்ளை பெறுதலை சாதனை என்பதுவும் .....
அப்பன் ஆகுதல் அதைவிட பெருமை என்றும் ...
சொத்தோடு சுகம் சேர்த்தல் ..
தன் தலையான கடமை என்று .......
பலமுறை கூவிடும் குடும்பத்து தலைவனிவன் ...
இங்கே ...!!! இங்கே...!!!

முக்குதல் முனகுதல் பூசுதல் பேசுதல் ....
குடும்பத்து தலைவிக்கு அன்றாட வேலையிது....
பிள்ளை பெறுவது மறுஜென்மம் எடுப்பதுவாம் .....
பிள்ளை பெறும் சாதனையை ....
நாயும்கூட இலகுவாக செய்துவிடும் .....
இங்கே..!!! இங்கே...!!!

சமுதாய சீர்கேடு கலாச்சார சீரழிவு ......
பட்டிமன்றம் போட்டு பலவாறு வாதிடுவர் ....
சமுதாய சீர்திருத்தம் மறுமலர்ச்சி கதைகளெல்லாம் ....
அழகழகாய் சொல்லிடுவார் ......
மேடைப்பேச்சு ....??? பேச்சோடு ...போய்விடும் ....
இங்கே ...!!! இங்கே ....!!!

என்னிந்த முரண்பாடு ......???.இங்கே .....???
நாளைய விடியலில் காணாது போவோமா........????????

அந்த நிமிடங்கள்தான்......!!!!

அந்த நிமிடங்கள்தான்......!!!!

என்னை நெகிழ வைக்கிறது நெகிழ்ச்சியும் அல்ல .......????
என்னை உருக வைக்கிறது உணர்சியும் அல்ல ....????
என்னை மகிழ வைக்கிறது மகிழ்ச்சியும் அல்ல ...????

ஆனால் .............................!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னை மறக்க வைகின்றது எதுவென்றால் ......!!!
நானும் நீயும் இருக்கின்ற அந்த நிமிடங்கள்தான்.

பெண்ணே ....!!

பெண்ணே ....!!

மயங்கவைக்கும் உன் கொடி இடைக்கும்..
கிறங்கவைக்கும் உன் கருவிழிக்கும் ..
இழுக்கவைக்கும் உன் புன்சிரிப்புக்கும் ..
உருக வைக்கும் உன் அழகு வதனத்துக்கும் ..
இன்னும்... இன்னும் .....
எத்தனை விலையும்...

தரலாமடி ..பெண்ணே .....!!!

பாரதிகூட...!!!

பள்ளிப்படிப்பு ...
ஒருவரையரைமட்டும்தான் ......
ஆனால் .....?
பருவப்படிப்போ.....!!
பள்ளியறை போகும்வரை ....
அனாலும் ..
பாரதிகூட... ..இதற்கு தேவைப்படுவான்

பரிதாப ஆசைகள்.....!!!

பரிதாப ஆசைகள்.....!!!

வாழும் வயதில் பரிதாப ஆசைகள்.....
எண்ணி இருந்த எத்தனை லட்சியங்கள் .....
கண்ணில் நீர் வழியும் கற்பனை கோபுரங்கள் ...
எல்லாமே எங்கே...........?
சிதைத்து விட்டன ...புதைந்தும் விட்டன .......
காலந்தின் பிடியில்.... காணமல் போயின .....

அதில்கூட ...நான் ....!!!

அதில்கூட ...நான் ....!!!

நீ .....!!
உமிழ்கின்ற எச்சியக் கூட..
உமிழ்ந்துவிடாதே .....
அதிகூட ...நான் ....!!!

நண்பா......!!!!!

நண்பா .....!!
நட்பு ..என்றால் என்ன ...?
உன் ஆடை நழுவும்போது...
உன் கைகள் எப்படி அதனை தாங்க விரைகின்றதோ ....
அதேபோல்தான் நட்பும் ...
உனக்கு துன்பம் வரும்போது..
நட்பு உன்னை பாதுகாக்கும் ..

தாயா .....? தாரமா...?

தாயா .....? தாரமா...?

உன்னை ....!
தன்னுள் சுமந்தவள் தாய் என்றால் ....!
உன்னை ...!
தன் நெஞ்சினுள் சுமப்பவள் தாரம் .

கருவறையில் உன்னை ...சுமந்தவள் தாய் என்றால் ..!
அந்த கருவறைக்குள் உன் உயிரை சுமப்பவள் தாரம் .

பாசத்தை தந்தவள் தாய் என்றால் ...!
பாசத்தோடு நேசத்தையும் தருபவள் தாரம்.

உதிரத்தை பாலாக்கித் தந்தவள் தாய் என்றால் ...!
அந்த உதிரத்தை உயிராக்கி தருபவள் தாரம் .

தன் மடியை தந்தவள் தாய் என்றால் ..!
தன் தோளைத் தந்தவள் தாரம் .

என்னவளே .....!!

என்னவளே .....!!

உன் .....!
பல்லின் இடுக்கினிலே ...
தங்கிவிட்ட ...அந்த ...!!
தேங்காய் துருவலில் கூட ...
நான் ....!!!!

மௌனம் .....????

மௌனம் .....????

மௌனம் ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை ..நாம் வாய் திறந்து பேசவில்லையே தவிர ..
மௌனம் நடத்துகின்ற போராட்டமானது உன்னையே திருப்பி போட்டுவிடும் ..ஆகா ....!!
மௌனமாக இருப்பது என்பதே நாம் போடுஹின்ர வேசம்தான்...
அதாவது வெளி உலகிற்கு தெரிவது.. நாம் மௌனமாக இருக்கின்றோம் ..
இந்த மௌனம் நடத்துகின்ற போராட்டத்தில் நாம் தோற்றுபோவதுதான் உண்மை ...

என்னைபொருத்தவரை மௌனம் இயலாமையின் வடிவம் ..
உனக்கு தெரியுமா ....??? மௌனம் உன்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கும் ..

என்னை அழவிடுங்கள்....என் மௌனங்கள் கலைக்கப்படலாம் ...
அது உள்ளே என்னை... என் உணர்வை தகர்த்தெறிகின்றது ..
உள்ளே நடத்துகின்ற போராட்டத்தில் வாய் பேசாது ஊமை ஆகிப்போகின்றேன்.

நாம் தூங்கும்முன்னே ..வந்து விடியு முன் போவதுகூட மௌனமாகிப்போன நனவுகளின் கனவுதான் ..
மௌனம் சொல்லாமல் சொல்லும் ..கொள்ளாமலே கொல்லும்..பேசாமலே பேசும் ...

நாம் வாயால் பேசுகின்ற பாசை சிலவேளை மௌனமாகி போகும் ஆனால் .....
மௌனம் பேசுகின்ற பாசையோ ....ஒருநாளும் மௌனமாகிப் போகாது ...!!!

வர -- தட்சணை ...???

வர -- தட்சணை ...???

உன் நேசத்தை கேட்டான் ...கொடுத்தாய்...
மடி கேட்டான் கொடுத்தாய் ...
ஏன் .....உன் பெண்மை கேட்டான் .....
அதைக்கூட அசட்டு பெண்ணே ....கொடுத்தாயடி ........
அத்தனையும் இலவசமாகவே......ஆனால் ... See More
அவன் துணையாக வர -- தட்சணை கேட்டானா ....?

உரசுவதட்குதான்... அவர்கள் ....லாயக்கடி ...பெண்ணே

நண்பா....!!

நண்பா....!!

சொல்லிவிடு ..அவளிடம் .....
அவள் நினைவு குப்பைகளை .....கிளரச்சொல்லி ......
காரணம் .....
அங்கே...நீ ..புதைந்து இருப்பது ...
சிலவேளை ..தெரியாமலே இருக்கலாம் ....

புதைகுழி என்றும் சொல்லிவிடாதே ...
பெண்கள் நினைவுகளை ஒருபோதும் ...
புதைகுழிக்குள் புதைப்பதில்லை ....
இதயத்து மூலைக்குல் ஓரமாகப் போட்டுக்கொள்வர்

காதல் எப்போதும் ......பன்மைதான்....!!!!

காதல் எப்போதும் ......பன்மைதான்....!!!!

காதல் என்ற பன்மைக்குள் வந்துவிடு ..
நீயும் அவளும் ..எப்போதும் ..ஒன்றாகவே ......
ஒன்றை மறந்து விடாதே ....
காதல் எப்போதும் ......பன்மைதான்

என் எழுத்து இப்போ தடைப்பட்டு போனது ....!

என் எழுத்து இப்போ தடைப்பட்டு போனது ....!

இலைகள் பட்டுப்போய் தலை குனிந்து விழுந்தன ...!
ஆனால் ....!
என்மன வேர்கள் மட்டும் இன்றும் என்னுடன் உறவாடியவண்ணம் ...!
நான் நானாக இல்லை...? இப்போ....!
என்னையே ...என்னுள் புதைத்துகொண்டேன் ...!
இன்றோ நாளையோ ...! என் எழுத்தின் வேர்கள் பட்டுப்போகலாம் ..!
அன்றே ...நான் எழுதிய கிறுக்கல்கள் பலருக்கு என்னை ஞாபகப்படுத்தலாம் ..! Ranjani Bala March 16 at 5:29am
கவிஞன் பிறப்பில் கவிதை பிறக்கும் ..! கவிஞன் இறப்பில் கவிதை நிலைக்கும் ..! அனால் ...? கவிஞன் கண்கள் உறங்கி விட அவன் கவிதை மட்டும் விளித்தபடி ...! இங்கே அவன் என்பது அவளே ....! அவள் வாலிப கவிதையில் பிழைகள் பல மலிந்து இருக்கலாம் .. அதற்காக ....அவள் உணர்வையே சந்தேகப் படுவதா ...? ஒரு முதுமை கவிஞனின் வார்த்தையிலா அவள் சிக்குண்டாள் ..!

கருத்து வேறுபாடுகளால் கற்பழிக்கப்படும் நட்பு.........

கவிச்சமரில் தொடங்கி கருத்துச்சமரில் முடிந்து போன ஒரு நட்பை பற்றி இன்று பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் பின்னிய கவி வலையில் அவள் இதயமும், அவள் பின்னிய கவி வலையில் என் இதயமும் சிக்கிக்கொண்டது. எம் கவி உரசலில் கருத்தரித்த உயிருக்கு நட்பு என்று பெயர் சூட்டினோம்.

முகப்புத்தகத்தின் (Facebook) பக்கங்களில் நம் நட்பு வேர்விட்டது. நாளாக நாளாக "உங்கள் சிசுவுக்கு 'நட்பு' என்ற பெயர் பொருத்தமில்லை; 'அறிமுகம்' என்பதே பொருத்தமாக இருக்கும்" என்று என் இதயம் முனங்கத்தொடங்கியது.அதற்கும
் காரணம் இல்லாமலில்லை.

முதல் காரணம்:

தேநீருக்காக தான் சர்க்கரை; சர்க்கரைக்காக வேண்டி யாரும் தேநீர் குடிப்பதில்லை. அதே போல சந்தர்ப்பத்துக்கு தான் கவிதை; கவிதைகளுக்காகவே சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சர்க்கரையை போல் தொட்டுக்கொல்வதட்காக தான் கவிதை வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

கவியரசு கண்ணதாசன் கூட முதல் இரவில் மனைவியிடம் கவிதை சொல்லப்போயிருந்தால் மறுநாள் மனைவி மூட்டை முடிச்சோடு வீடு திரும்பியிருப்பாள்.

ஆனால், என் தோழியின் கருத்தோ வேறுபட்டதாக இருந்தது.

இணையத்தில் இணைப்பை ஏற்படுத்தும் போது கூட "Hi" என்ற வார்த்தைக்கு பதிலாய் கூட ஒரு கவிதை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பாள்.

இரண்டாவது காரணம்:

கவிதை எழுதுபவன் கவிஞன் என்று அகராதி விளக்கம் தரலாம். என்றாலும் கவிதை எழுத தொடங்கும் எல்லோரும் தன்னை "கவிஞன்" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை கவிப்பிரியன் என்று அறிமுகப்ப்டுத்திகொல்வதிலே தான் நான் பெருமை அடைகிறேன்.

கவிஞனுக்கு தன்னடக்கம் இருக்க வேண்டும். (இங்கு நான் கவிஞன் என்று சொன்னது கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் என்ற போர்வையில்)

"நான் நல்ல கவிதை எழுதுவேன்டா!"

"என் கவிதையை எல்லாரும் ரசிக்கிறாங்க!"

என்று அவள் உதடுகள் அடிக்கடி முனுமுனுப்பதில் எனக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவள் நல்ல கவிதைகள் எழுதுவாள். என்றாலும் அந்த அழகினை ரசிப்பதை விட்டும் அவளின் "தற்பெருமை" என்னை தூரமாக்க தொடங்கியது.


கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லும் உரிமை அதை எழுதிய கவிஞனுக்கு கிடையாது... வாசகனே அதை சொல்ல வேண்டும். இதுவே என் கருத்தாக இருக்கிறது.

கருத்து முரண்பாடுகளில் எம் உறவு கற்பிழந்து விட்டது என்றே நான் எண்ணுகிறேன். நான் பிழையா? என் கருத்துகள் பிழையா? உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்



நண்பா ..!

கற்பை கவியோடு ஒப்புடு ...ஏற்றுக்கொள்கின்றேன் ...ஆனால் .. நட்பு அது அழகான கவிதை
அதனை மறந்தும் கற்பழிப்பு என்று கொச்சப்படுத்திவிடாதே .....! நீ அவளை பற்றி எழுதுகின்றாய் என்று சொல்லி அவள் உணர்வையே உன் வார்த்தைகளாலேயே காயப்படுத்திவிட்டாய் ....அவளுக்காக நான் பரிதாபப்படுகின்றேன் ..
நட்பை கற்பழிப்புக்கு ஒப்புடுவதா .....? உன்வாததில் நான் முரண்படுகின்றேன் ....!நட்பில் பல முரண்பாடுகள் வரலாம் ..அதற்காக ...விலைமதிக்கமுடியா கற்பை உதாரணம் காட்டுவது சரியல்ல ....! ஆண்களுக்கு கற்பழிப்பு என்பது சுலபமான வார்த்தை அனால் பெண்ணுக்கோ அவள் குரல்வளையையே நொறுக்கி சாகடிக்கும் நெருப்புத்துண்டங்கள் .
நீங்கள் இருவரும் பின்னிய கவிவலையில் சிக்குண்டது சரிதான் ...அனால் அதற்கு அழகான நட்பை பெயராக சூட்டிவிட்டு கருத்து வேறுபாடுக்காக அவள் மேலேயே குற்றம் சாடுவதா ..?
உங்கள் நட்பை முதல் முதலாக தெரியப்படுத்தத்தான் அறிமுகம் எனும் முகவரி தேவை .இந்த முகவரி என்பதே மனிதர்கள் ஏற்படுத்திய கலாச்சார பண்பாடு என்னை நீயும் உன்னை நானும் அறிந்துகொள்ள உதவுகின்ற கலாச்சார முகவரி அறிமுகப்படலம் .
உங்கள் நட்பு கவிதையால் ஏற்பட்ட நட்பு இதிலே அவள் எப்போதும் கவிதையை எதிர்பார்ப்பதில் தப்பில்லையே ...?
உன் கவிதை பிடித்ததாலேயே உன்னை அவளுக்கு பிடித்தது என நினைக்கின்றேன்.
இப்போ உன் காரணங்களுக்கு விளக்கம் தரலாம் என நினைக்கின்றேன் ..தவறா இருந்தால் மன்னித்துவிடு..கருத்துசுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பாய் என நினைக்கின்றேன் ...
நன்றி .....
காரணம் 1 : சக்கரைகாக தேநீர் குடிப்பதில்லை ..ஆனால் ..அந்த தேநீருக்கு சுவையூட்ட இங்கே சக்கரை வேண்டி இருக்கின்றது என்றால் அதுதான் உண்மை . இப்போ நாம் சக்கரை இருந்தால்தான் தேநீரே போடுகின்றோம் ..இது காலவேகத்தில் மாறிப்போன ஒன்று ...!
அடுத்து கண்ணதாசனை உனக்காக உதவிக்கு அழைத்திருக்காய்....உனக்குத்தெரியுமா கண்ணதாசன் என்றாலே
எமக்கு நினைவுக்கு வருவது அவன் கவிதைதான் ...!நீ அவனை முழுமையாக அறிந்திருக்கவில்லைபோலும்
அவனே சொல்லி இருக்கான் ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று ...அவன் எந்த செயல செய்வதென்றாலும் கவியுடந்தான் செய்வான் .

உனக்கு தெரியுமா ...?பெண்கள் எப்போதும் தங்கள் கணவன் தன்னைப்பற்றி வர்ணிப்பதை மிகவும் விரும்புவாள் ..
கவிதை தெரிந்தவன் முதல் இரவில் அவளோடு உணர்வுகளை பஹிர்ந்துகொள்ள கவிதையை துணைக்கு அழைப்பான்..இதற்கு நீ பெண்ணாக பிறந்திருக்கவேண்டும் நண்பா ...!
காரணம் 2 : உனக்கு கவிதை எழுதி அதற்கு முகவரியும் கொடுக்கத்தெரிகின்றது...அதனை அடையாளம் காட்டவும் தெரிகின்றது ..அது உன் உரிமை உனக்கே உரித்தானது ...நீ உனக்காக எழுதினாலும் உன் உள்ளம் சொல்வதுதான் என்ன ..?உன்கவிதை அதனை மற்றவர்கள் பார்த்து ரசிக்கவேண்டும் என்றுதானே அவர்கள் பார்த்து விமர்சிப்பதால்தானே இந்த கவிஞன் வாழுகின்றான் .

சிலவேளை ..நீ கூறிய இந்த பெண் தன் மீது தன்கவிதை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருக்கலாம் ..தன்னை நீ நன்றாக புரிந்திருப்பாய் தனைப்பற்றி அறிந்திருப்பாய் என்பதால்தான் என்னவோ ..உன்னிடம் இப்படி சொல்லி இருக்கலாம்..
நீ இங்கே நல்ல நட்பையே கொச்சைப்படுத்தும் கற்பு இழப்பு என்ற நெருப்புத்துண்ட வார்த்தை அவளை அவள் உணர்வை அவள் மன அடிவரை சென்று ரணப்படுத்தும் என்று கவிஞான உனக்கு புரிந்திருக்குமா என்ன ....?
நண்பா...! நட்பு புனிதமானது அதில் விரிசல்கள் பல வரலாம் ..அவளை நீ புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் ..
கவிஞன் எப்போ நான் என்ற போர்வையில் இருந்து விலகுறானோ அப்போதே அவனால் தரமான கவிதை கொடுக்கமுடியாது என நான் நினைக்கின்றேன் .

நீ ஆணாக இருப்பதால்தான் அவளை அவளின் அன்பான நட்பை பெரிய வார்த்தை கொண்டு அவள் உள்ளத்தை தகர்த்து எரிந்திருக்குறாய்..
ஒரு வேளை நீ அவளாக இருந்திருந்தால் பெண்மையும் ..நட்பும் புனிதமானதென்று புரிந்திருப்பாயோ என்னவோ ..?

இதில் எழுதியவை உன் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்திவிடு .....கருத்துசுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பாய் என நினைக்கின்றேன் ...
நன்றி .....

B. R .Ranjani

Ranjani!

"கருத்து வேறுபாடுகளால் கற்பழிக்கப்படும் கற்பு" இந்த தலைப்பையே நீங்கள் தலை கீழாக பிருந்து கொண்டிருப்பது கவலைக்கிடமானது.

"ஒரு பெண் ஒரு ஆடவினால் தன் விருப்பத்துக்கு மாறாக தன் கன்னித்தன்மையை இழத்தல்" இதுவே நீங்கள் விளங்கி கொண்டிருக்கும் கற்பழிப்பு. எனினும் கற்பு என்ற சொல்லுக்கு என் விளக்கம் வித்தியாசமானது.

'கற்பு' என்பது 'நெறி' அல்லது 'முறைமை' என்றும் பொருள்படும். கட்பிலத்தல் என்பது 'நெறி தவறுதல்' அல்லது 'முறை தவருதலாகும்'....

எனவே விலை மதிப்பில்லாத பெண்ணின் கற்பை நான் கொச்சை படுத்தவில்லை என்பதை தமிழறிந்த உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஆச்சரியமே!

"சக்கரைகாக தேநீர் குடிப்பதில்லை ..ஆனால் ..அந்த தேநீருக்கு சுவையூட்ட இங்கே சக்கரை வேண்டி இருக்கின்றது என்றால் அதுதான் உண்மை "
ஆம் அதை நான் ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை....

"தேநீருக்காக தான் சர்க்கரை; சர்க்கரைக்காக வேண்டி யாரும் தேநீர் குடிப்பதில்லை. அதே போல சந்தர்ப்பத்துக்கு தான் கவிதை; கவிதைகளுக்காகவே சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சர்க்கரையை போல் தொட்டுக்கொல்வதட்காக தான் கவிதை வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்."
... See more
இது உங்களுக்கு புரியவில்லை...
தேநீருக்கு சர்க்கரை போடாமல் ஒரு முறை "ஒரு கோப்பை சர்க்கரைக்கு ஒரு துளி தேநீரை ஊற்றி அருந்தி பாருங்கள்...

நான் என்ன சொன்னேன் என்பது உங்களுக்கு புரியும்

"அடுத்து கண்ணதாசனை உனக்காக உதவிக்கு அழைத்திருக்காய்....உனக்குத தெரியுமா கண்ணதாசன் என்றாலே... எமக்கு நினைவுக்கு வருவது அவன் கவிதைதான் ...!நீ அவனை முழுமையாக அறிந்திருக்கவில்லைபோலும் அவனே சொல்லி இருக்கான் ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று ...அவன் எந்த செயல செய்வதென்றாலும் கவியுடந்தான் செய்வான்"

நான் கண்ணதாசனை உதவிட்கு கூப்பிடவில்லை.... காரணம் கண்ணதாசன் கவியரசாக இருந்தாலும் என் மனதில் இருப்பதை சொல்வதற்கு கண்ணதாசனை விட நானே தகுதியுடையவன்.

கண்ணதாசன் சொன்னது "ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று தானே தவிர ".... "ஒரு கையில் எழுதுகோலையும் மறுகையில் கவிதையையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகுமோ அதுவரை நானும் போவேன் என்று சொல்லவில்லை.

"உனக்கு கவிதை எழுதி அதற்கு முகவரியும் கொடுக்கத்தெரிகின்றது...அதனை அடையாளம் காட்டவும் தெரிகின்றது ..அது உன் உரிமை உனக்கே உரித்தானது ...நீ உனக்காக எழுதினாலும் உன் உள்ளம் சொல்வதுதான் என்ன ..?உன்கவிதை அதனை மற்றவர்கள் பார்த்து ரசிக்கவேண்டும் என்றுதானே அவர்கள் பார்த்து விமர்சிப்பதால்தானே இந்த கவிஞன் வாழுகின்றான் .

சிலவேளை ..நீ கூறிய இந்த பெண் தன் மீது தன்கவிதை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருக்கலாம் ..தன்னை நீ நன்றாக புரிந்திருப்பாய் தனைப்பற்றி அறிந்திருப்பாய் என்பதால்தான் என்னவோ ..உன்னிடம் இப்படி சொல்லி இருக்கலாம்.."

நிச்சயமாக இதை நான் மறுக்கிறேன்... நான் கவிதை எழுதுவதற்கு சந்தர்ப்பம் தேடியது கிடையாது. மற்றவர்களின் பாராட்டுக்காக கவிதை எழுதுவதும் இல்லை. கவிதை என் தோழன். என் ஆதங்கங்களை... என் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்துகிறேன்.... See more... See more

நிச்சயமாக மற்றவர்களின் விமர்சனத்தில் தான் உயிர் வாழ்கிறது. என் நடத்தைகளிளோ, என் கவிதைகளிலோ பிழைகள் இருந்தால் விமர்சிப்பதை தான் நான் விரும்புவேன். நான் நண்பர்களுக்கு என் கவிதைகளை அறிமுகப்படுத்துவேன். ஆனால் அதை நான் விமர்சிப்பது கிடையாது. அவர்கள் பிழையான கருத்தை சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது....

ஆனால் துரதிஷ்டவசமாக என் தோழிக்கு விமர்சனங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை இல்லை.

காயப்படுத்துகிறேன்.... கொச்சைபடுத்துகிறேன் என்று கூறி எரிந்து விழுவதற்கு முதல் "எனது பிழை என்ன என்று அவள் யோசித்து இருப்பாளேயானால் நட்பு இப்போது கூட கற்போடு இருந்திருக்கும்

கருத்தடை சாதனம் ...!!!

கருத்தடை சாதனம் ...!!!

என் கவி பார்த்த ..இலக்கியத்தை சப்புகின்ற ..
முதுமைக் கவிஞனுக்கு .....நெஞ்சில் படபடப்பாம் !!
முதுமைக் கவிஞனுக்கு என்னால் நட்டமா என்ன ...??
என் கவி படித்த பழமைவாதி ..எனப்பார்த்து ...
வரத்தை கொண்டு படபடபடுக்குறார் .

வாலிப கவிஞை ... என் வசீகரிப்பு புன்சிரிப்பில் ...
புதுக் கவிதை மகள் ..எப்போதான் ..
கருத்தரிக்கத்தொடங்குகின்றாள்...

ஒரு முதுமைக் கவிஞனின் கைகளிலா ..
கருத்தடை சாதனம் ...!!!

மழலை கவிதைகளில் பல தவறுகள்
மலிந்து இருக்கலாம்... அதற்காக ..!!
வளரும் கருவையே அழிப்பதா...??

கவிஞை என் கருத்தரிப்பை ...உன்னால் ...!!
நிறுத்தவா முடியும் .

அநாதை ....!!! :(

அநாதை ....!!!

யாரையும் நினைக்க முடியவில்லை ..!
காரணம் ....???
நினைப்பதற்கு யாருமில்ல ..
யாரையும் வெறுக்க நேரமில்லை ...!
காரணம் ...??
வெறுப்பதற்கு யாருமில்லை .
யாரையும் விரும்ப நேரமில்லை ..!
காரணம் ....???
விரும்புவதற்கு யாருமில்லை .

தமிழ் மகளே ....!!!

தமிழ் மகளே ....!!!

எனக்கு தனிமை வேண்டும் .....அங்கே ...!!
என் ஆசைதீர அவளை ..அள்ளி ...நான் ..
அணைக்க வேண்டும் .

என் தாயகம் செல்ல வேண்டும் .....!அங்கே ...!
என் கவலை தீர .....அவளை ...
எண்ணி அழ வேண்டும் .

என்னவளே ...!!
என்னருகில் ...நீ ...வரவேண்டும் ....!!
எந்நாளும் உன்னை கவியாக்கி ....நான் ..!!
மகிழ வேண்டும் .

பூமகளே ....!
பலமுறை ..நீ ..!!மலரவேண்டும் ..
எந்நாளும் உன்னை ..நான்
என் தலையில் சூடவேண்டும் .

மழைமகளே .....அழகா நீ ...!!
பொழிய வேண்டும் ...
தினமும் அதில் நான் ..
நனைந்து குளிக்க வேண்டும் .

என்னவளே ...அழகிய தமிழ்மகளே ....!!!
என்னோடு ..நீ ..!! வாழவேண்டும் ..
உன்னினைவோடு ..ஒருநாள் ..!
இறக்கவேண்டும்......!!!!!!!!!!!!!!!!!!!!!!

கவிஞன் ....!!!

கவிஞன் ....!!!

கவிஞன் வரவில் ....
கவிதை பிறக்கும் .
கவிஞன் படைப்பில் ..
கவிதை நிலைக்கும் .
கவிஞன் இறப்பில் ...
கவிதை வாழும் .

கவிஞன் உறங்க ..
கவிதை விழித்தபடி ...!!!!

அன்னை ..!!!

அன்னை ..!!!

தன்னுள் சுமந்து ..தன்னுடன் சுமந்து ...
தன் இன்னல்கள் தான் சுமந்து ..
தன் எண்ணம் சுமந்து ..
கோள் யார் மூட்டினாலும்..
தன் கொள்கை தவறி நின்று ...
தன் உதிரத்தையே பாலாக்கி தருகின்ற ..
அன்னையவள் ...பாசக்கடன் என்று தீர்ப்பேன் ..????

கரு விழி ......!!

கரு விழி ......!!

உன்னிடம் ...
எனக்கு பிடித்தது ...
உன் கருவிழி மட்டும்தான் ....
காரணம் ...??
என் உணர்வை துண்டுவதே ....
அதுதானே ....!!

உன் விழி அசைவில்...
என்னையே ...!!
தொலைத்துவிட்டேன் ..

இதயம் ....!!!!

இதயம் ....!!!!

என் இதயம் ..
ஒருநாள் இறந்துபோகும் ...
அப்போ ....?
உன் நினைவும் ...
அதனோடு அழிந்துபோகும் ...!!!

சோகம் ...!!!

சோகம் ...!!!

சோகங்கள் கூடிநின்று .....
சோர்ந்து போக வைத்ததின்று .....
சோறை விட்டு நான் விலக .....
சோகமே உணவாக ....!

காதல் ..சோகம் ...!

காதல் ..சோகம் ...!

காதலுக்கு காத்திருந்து..
காதலுடன் நான் பாட...
காதல் பாட்டு கேளாது ....
காததூரம் சென்றுவிட..
கவலையுடன் பாடினேன் ..
காதல் சோக கீதமொன்று ....!!

முல்லை....!

முல்லை....!

முத்துப் பந்தல் சிரித்திருக்க ...
முல்லை நீ .....! வருவதற்கு .....
முத்துப் பந்தல் நான் விரித்தேன் ....
முல்லை உனக்கு நோகாமல் ...!!!!!

பெண்மையும் கசக்குமோ ....????

பெண்மையும் கசக்குமோ ....!

மணம் முடிக்கும்போது .....!
மானே.... மணியே ...
தேனே ... கனியே ...
கட்டிக்கரும்பே ....கவிதை கொண்ட வளே...
என்று கவி பாடிய .. நீ ....!
நாட்கள்...
நகர... நகர ...
அடியே .... இவளே ....
நாயே ....! பேயே ...!
நாசமாய் போறவளே ...! என்று ..
பலவாறு கூறுவதேன்...?

பழகப் பழகப் பெண்மையும் கசக்குமோ ....!

வாழ்வு ...!

வாழ்வு ...!

வாழ்வு என்று நான் எழுதும்போதே ..பிழை ...
வாழ்வு வாழுவதட்கே ..இறைவன் அனுப்பி வைத்தானோ ...
வாழ்வில் தவழும்போதும் துன்பம் ...
வாழ்வில் நடை பயிலும்போதும் துன்பம் ...
வாழ்வில் பட்டதெல்லாம் துன்பம் ..இதில் ...
வாழ்வை வளமாக்கு ...! அப்படியானால் ...
வாழ்வை எப்படித்தான் வாழுவது .....?

வானம் சிரித்து பூமி தளிர்த்து ....
காற்றிடை மரங்கள் ஆனந்தத்தில் திளைக்க ....
நம் நாடினிலோ ....நர்த்தனமிடும் யவ்வனங்கள் ..
நாற்றிசை மாறிப்போக ....நாமிருக்கும் பூமியெல்லாம் ..
நயம் மாறி நலம் மாறி உருமாறி போக .....
நலமான நல்வாழ்வை எப்படித்தான் வாழுவது ......?

அடியே ..சகியே .....!

அடியே ..சகியே .....!

அடியே ..சகியே .....!
உனக்காடி கலியாணம் ..
இலவயசுக்காரிஎன்று...
உன்னைநான் எண்ணி இருக்க...
இலகுவாக தலையை நீட்ட.....
எப்படி நீ சம்மதித்தாய் ..
சொல்லேண்டி என்சகியே..!

எனக்கு கலியாணம் ..
என்று மடல் அனுப்பிய நீ ....
எந்த நாட்டுக்காரன் என்று ...
என்ரீ நீ எழுதவில்லை ...
என்றாலும் புரிந்ததடி ..
வெளிநாட்டுக்காரநென்று....
சரியாடி என் சகியே......!

கனடாக்காரனா .....?அப்போ ..
உன் கொப்பன் செத்தானடி ....
50 லட்சமென்று கூவியே கேட்டிருப்பான் ...அப்போ ..
உன் கொப்பர் யாரிடம் கடன் கேப்பான் ...
சொல்வாயா என் சகியே ....!

20 லட்சமென்று ..
ஜெர்மனியில் இருப்பவனும் ..
சுவிசுக்குப் போனவனும் ..
பிரான்சில் குடிகொண்டவனும் ..
கேட்டுத்தொலைப்பானே....
உன்கொப்பர் தன் தலையை ..
யாரிடம் அடகு வைத்தான் ...
சொல்லித்தொலையாயோ.....
என் அன்பு சகியே ....!

லண்டனில் இருப்பவன்..
இங்கிலீசு பேசுவானாம்...
இவன் கொப்பன் ..இதை சொல்லி ..
நிறையவே புடுங்கியிருப்பான் ...
உண்மை இதுவென்று ....
டக்கென்று சொல்லிவிடு ..
என் பிரிய சகியே .....!

அமெரிக்கக்காரன் எண்டால் ...
சொல்லவே வேண்டாம் ...
உன் கொப்பன் கோவணத்தையும்...
சேர்த்து உருவி இருப்பர் .
இவர்கள் கோவணத்தை...
நாயும் புடுங்கா காலம்தான் ..வராதாடி ..
என் இனிய சகியே .....!

படிக்காதே ..வீட்டிலிரு ..
படிப்பிக்கும் காசுதனை ..
சீதனமாய் ..சேர்க்கவேணும் ..
கொம்மா ..சொல்லியும் ..
ஏன்ரி.. நீ...படித்தாய் ...
படித்தும் என்ன பயன் ...
பல லகரம் கொடுத்துதானே ..
பதுமையாகப் போறாய் நீ ..
என் அன்பு சகியே .....!

ஊரில் இல்லையாடி ..
உனக்கேத்த மணவாளன் ..
வெளிநாடு போக பணமாக கொடுவென்று ..
உங்குள்ளவனும் சொல்லி இருப்பான் ..
உன் அன்புக் கொப்பரிடம் ...
அப்படித்தான் இல்லாவிடின் ..
உன் கொப்பர் பணத்தை ..
திண்டே தீர்திடுவான் ..
உன் வீட்டுத்தின்னையிலே ...
சரிதானே என் சகியே .....!

வயிறு பற்றுதடி ...
நாசமாய் போறவங்களை ..
பல தடவை நினைத்துவிட்டால் ..
படிப்பதற்கும் காசில்லை ..
தின்பதற்கும் வழியில்லை ..
இவர்களுக்கு கொடுப்பதற்கு ..
எங்கேயடி நாம் போவோம் ..
பொறுக்காது சொன்னேண்டி ....
பொறுப்பாயா என்சகியே .....

நன்றியுடன் ..
B . R . ரஞ்ஜனி...!
பதிப்பு :(சுவடு 1993 ,ஈழநாடு பாரீஸ் ,யதார்த்தம் )

ஓவியமா.......??????

ஓவியமா.........???? என்றான் ...!
ஆமாம் என்றேன்.
யார் வரைந்தது......? என்றான்....!
பெற்றவர் என்றேன்.
ஓவியம் இன்னும்....முற்று பெறவில்லை.....?என்றான்...!
அதற்காக.......?
என்புருவம் உயர்த்தினேன் .....!நான்......?
ஓவியத்தை தொடர்ந்து வரையட்டுமா......?என்றான்...!
சுட்டும் விளிசுடரால் ..சுட்டெரித்தேன்...அவனை....!
மன்னிக்க ...வேண்டும்...!என்றான்.
மன்னித்தேன் நானும்...!
காரணம் ...!
அவன் உணர்வைத் துண்டியதே நான்தானே..?

கருக்கலைப்பு........

கருக்கலைப்பு......

அன்பே ...நீ ....!
பாதையில் நடக்கையில்....
பலரது கண்கள் எல்லாம் உன்மேல்தான் .....
அனுபவம் உனக்கு புதிதல்ல ....
என்றாலும் பொறாமைத் தீயில் பொசுங்கிப்போவது..
என்னவோ ....!!என் இதயம்தான் ......
உனக்குத்தெரியாதா ....?
பார்வையே ஒருவித கருக்கலைப்பென்று .....!

கன்னி ........!!!!!!!

கன்னி ஏழ்மை இவள் வயிற்றை நிரப்பியது ...!
நாட்கள் அவள் வயதை கூட்டியது ...!
பூச்சுக்கள் பூசியே..அழகு மாறியது ...!
அழுதழுதே கண்ணீர் வற்றியது ......!
மணக்கயிரை எதிர்பார்த்து கன்னங்களும் குழி விழுந்தது ...!
சீ....தனத்துக்கு ..வழியில்லாமல் ...
காலங்களும் ஓடியது ...!
இவள் பக்கம் ,,,,,,!
உரசுகின்ற புருசர்கூட....!
புருஷனாய் வர தகுதி இழந்தானோ ..?

மௌனம் ........

மௌனம் ..!

மௌனம் அழாகான நிமிடங்கள்.!
மௌனத்தில் ........அழகான அந்த வேளையில்..!
நீயும் நானும்.? மௌனத்தின் பாசைகளை.....!
திகட்டாமல் திருடிய நேரங்கள் .!
மௌனம் ? இங்கே..!
மெதுவாக .!தன்னை அறிமுகம் செய்தது .!
பெண்மையை ..அழகாக.! மொட்டவிழ்த்து காட்டியது..!
ஆண்மையின் அழகை ....
ஆளுமையுடன் அதிசயமாய் காட்டியது .....!

நீயும் நானும் .....?
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட வினாடிகள் ....!
கலைக்கப்படாத தாம்பத்ய மௌனங்கள்...!
தலை சாய்த்து கன்னத்தே செம்மையுற வைத்தது ...!
மௌனத்தின் அந்தரங்கம்களை இருவருக்கும் நெருங்கவைத்த நேரங்கள் ...!

இங்கே...!
மௌனங்கள் மௌனமாக இருக்கவில்லை ..!

ஒற்றைவரி......???

ஒற்றை வரியில் உணர்வுகளை பஹிர்ந்து கொண்டோமா .....?
ஒரு விநாடி வந்துபோன நினைவு .....!
வினாவுக்கான விடை பலநேரம் கழித்தே ...!
இதயம் பேசாமலே பேசும்போது ...!
ஒற்றைவரி பலகதை..கூறிடுமே...!

வாழ்த்துகின்றேன்...!!!!

உன் இரவினில் வந்திட்ட கற்பனைக்கு ..1
உயிர் ஊட்டி உணர்வு தந்த நீ வாழ்க ....!
உன் முகவுரை முத்துக்குளிப்பில் ...!
உன் வார்த்தைகளோடு விளையாடும் கவிக்கு ...!
உன்சிந்தை கொண்டு எம் மன ஏட்டில் உலாவவிடும்...!
உன் கவிதைச் சிந்துக்கு ...!
முகமலர் கொண்டு வாழ்த்துகின்றேன்.

தென்றலை ......

தென்றலை தீண்டியபின்தான் உன்னை தீண்டினேன் ...!
அதுவரை அறியவில்லை நீ இத்தனை மென்மை என்று ....!
உன்னை திருபிப்போடும்போதும் அறியவில்லை .....நீ ....!
இத்தனை ராகங்களா என்று ...!
விழிகளை பார்தபோதான் அறிந்துகொண்டேன்.....!
நீ....இத்தனை அழகா என்று .......!
ஆக என்னையே தொலைத்து விட்டேனடி .......!

வஞ்சி .....!!!!

வஞ்சி என்னை கொஞ்சி அள்ளி வதனங்களில் லயித்து ...!
கஞ்சமின்றி முத்தங்கள் கன்னத்தில் தந்தே ....!
கொஞ்சுமொழி பேசிடவே ...முகம் சிவந்து ...நானும் .. !
நாணப்பிஞ்சென்று நீ..என்னை சீண்டுவதில் இன்பம் .....!
என் .....!
மெல்இடையில் கைவைத்துமென்மையுடன் நீ அணைத்து....
மெல்லெனவே நம் இருவர் ... முகங்களுமே நெருங்க ....!
சொல்லென்னா பலகோடி சுகங்களினை கண்டு ....!
எல்லை இல்லா உன் அழகை ..... ரசிப்பதில் இன்பம் ...!
நீ ...!
தேன் சொட்டும் மலரினிலே தேன்வண்டு மொய்த்தல்போல்.....!
எனை சுவைத்தே இருக்க ......உன் .....!
அசைவினில் நானும் மயங்கி ...!
என்றென்றும் உன் அழகை எண்ணுவதில் இன்பம்
உன் ...!
ராஜநடை பயிலும் அந்த அழகினை நானும் ரசித்து....!
எழில் வீசும் அழகினிலே என்னிலை நானும் மறந்து .....!
நீ மொழிகின்ற கவிகளிலே தினம் தினம் என்னை தொலைத்து ..!
ஆனந்தம் காண்பதிலேயே இன்பம் ....அடைகின்றேன்

காதல் ..??????

வாடல் துளியின்றி வளர்ந்து விட்ட காதல் ..
ஊடல் துளிவந்து மறந்து விட்ட காதல் ....
சாதல் காட்டாது தளிர்த்து விட்ட காதல் ..
கூடல் துளிர்விட்டு துவண்டு விட்ட காதல் ...

ஆடவர் பெண்கள் நயந்து வியக்கும் காதல் ....!!!
ஆசை விஞ்சி அழகிழந்து போனதுவோ ...?

காணக் கவியசைவில் கண்கொள்ளா காதல் ..
காமுக பார்வையிலே அடிபட்டு போனதுவோ ...??

பூவை இவள் என்பான் .....பாவை அவள் என்பான் ....!!
சூரியன் இவன் என்பாள்... சோதிடனும் இவன் என்பாள் ...!!

காலத்து வேகத்தில் கக்கிவிடும் வார்த்தைகள் ...
காலச்சருக்களில் காணாது போய்விடுமோ ...??

சொன்னது பொய்யோ ...?? சொல்லாதது மெய்யோ...??
காலத்தின் பக்கம் பதில் தேடி தரவேண்டும் ....???????????????

Thursday, 23 June 2011

சிறைக் கைதிகளாக ..!!

சிறைக் கைதிகளாக ..!!

என் மனதை வருடுகின்ற தென்றல்கூட.....

என்னை எரிக்கும் நெருப்பாய் ...!!!:(

காரணமே இல்லாது வந்து போகும் கோபங்கள் ....

காட்டுத் தீயாய் என்னுள்ளே ....!!!

சந்தேகங்கள் புற்றுநோயாக ...!!!

என்னுள் சிக்கித் தவிக்கும் சந்தோசங்கள் ...!!

என்னுள்ளே சிறைக் கைதிகளாக ..!!

உன்னை உன்னிடம் தொலைத்தே ...!!

உன்னை உன்னிடம் தொலைத்தே ...!!

நாட்கள் முட்களாய் நகர்வதும் ....

நாளிகைகள் நத்தைகளாய் உர்வதும் ...

உன்னை பொறுத்ததே ... காரணம் ...???

என்னை உன்னிடம் தொலைத்தே ...

Thursday, 16 June 2011

கவியானவள் ..!!!

கவியானவள் ..!!!

கணப்பொழுதில் என் உள்ளே உருவானவள்
இமைப்பொழுதில் என் கருவறைக்குள் கருவானவள்
பலபொழுதில் என்னுள்ளே சிசுவானவள்
கவிப்பொழுதில் என்கவிக்குள்ளே கவியானவள்

நம் இதயங்களே ...!!!

நம் இதயங்களே ...!!!



கலங்குவது ஏனோ கண்கள்தான் ...

ஆனால் ...!!! உடைந்து நொறுங்குவது ...??

உன்னையும் என்னையும் சேர்கின்ற....

நம் இதயங்களே ...!!!

Wednesday, 15 June 2011

என் மனத்திடை ...!!!

என் மனத்திடை ...!

 
தன்னம் தனிமையில் சாய்ந்துகொண்டு கைகளால் தலையில் முட்டுக்கொடுத்தபடி என்னையே நான் அலசுகின்ற நேரங்கள் .....!
எனக்கு தனிமை ரொம்பவே புடிக்கும் ....!
அந்த வேளை என்னையும் என்னை சுற்றியும் மிக எளிமையாக அலங்கரித்துகொள்வேன்.
என்மனதை அலங்கரித்தவண்ணம் அழகான பாடல்களை என்செவிகளுக்கு விருந்தாக்கிக்கொள்வேன்...,
அந்த வேளை என்னையே தொலைத்த நாழிகைகள் ...எனை மறந்து கற்பனை உலகில் வாழ்ந்து பார்ப்பேன் ...!
என் மனத்தினில் கற்பனை வர ...கற்பனைக்குள் வார்த்தைகள்வர....
வார்த்தைகளுக்குள் ..கவிகல்வர....எழுதுவேன் பல கவிதை யாவரும் ரசிப்பதற்கே .....!
என்கட்பனைக் குதிரையை தட்டிவிடுவேன் ..அது எங்கே செல்கின்றதோ அதுவரை நானும் செல்வேன் ...!
எனக்குள் ஒரு சுகம் கண்ணை முடி திறந்து கொள்வேன் ...எனக்குள் பல பூக்கள் பட்டாம் பூச்சிகளாக ....!
சிலவேளை அழகு இழந்துகூட இருக்கலாம் ..என்றாலும் எனக்கு பிடித்தவையே ....!
சோகம் ,பாசம் ,நேசம் ,கோபம் ,தாபம் ,சொல்லிக்கொண்டே போகலாம் ..என்னுள்ளே புதைந்து இருப்பவை ..
அத்தனையையும் தரம் பார்த்து தரம் பிரித்து என் பேனாமுனை முலம் வெளியில் கொண்டு வருகின்றேன் .
இவைகள் என்னிடத்தில் உள்ள அழுக்குகளா ..? இல்லை அழகுகளா...? தெரியவில்லை ...! ஆனாலும் ....!
இவைகளை இங்கே கொட்டும்போது என்னிடத்தில் ஒரு பக்குவம் ...!

நான் என்னையே காதலிக்கும் நேரங்கள்...நான் யார் ,,,,?எதற்க்காக பிறந்தேன் ....?
என்னால் என்வாழ்வு அர்த்தமாகின்றதா என்று என்னையே கேட்டுக்கொள்வேன் ...!
அப்போ கிறுக்கியவைகளை எல்லாம் மறுபடி பார்க்கும்போது ..எதோ புரிவது போல இருக்கும் ..!

நான் நிஜத்தில் வாழ்வதைவிட கற்பனையில் வாழ்வதே அதிகம் ...!அதில் கிடைக்கும் சந்தோசமே தனிதான் ..!
அதற்காக நிஜத்தையும் நிகழ்வையும் ஒன்றாக ஆக்கிக்கொள்ளமாட்டேன் ..!
கற்பனை தரும் சுகம் அதிகம் நிகதில் சாதிக்கமுடியாதெல்லாம்..அதில் சாதிக்கும் மகிழ்வு ....!
இயற்கை ரசிப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் ..அந்தி வேளை சூரியன் மறைவதை கண்கொட்டாமல் பார்ப்பேன் ....செக்கசிவந்த வானம் ....மழையில் குளித்த செடிகள் .....பறவைகள் தங்களுக்குள் பேசுகின்ற பாஷைகள்..
பனிக்கட்டியில் விளையாடும் சிறுவர்கள் ..இப்படி சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ரசிப்பதில் அலாதியான விருப்பம் ..எனக்கு பிடித்த நண்பர்களோடு
உரையாடுவதுகூட பிடித்தவையே.......!