Tuesday, 28 June 2011

வாழ்த்திடுவோம் ...!!!

முகம் எனும் புத்தகத்து ...முத்துக் குழந்தை நாம் ..
நாளை உன் பிறந்தநாளாம் ...உன்னை நாம் வாழ்த்த வேண்டாமா ...?

அணைத்துகொண்டோம் ...நாமும் உன் நண்பர்களாக ...
மறந்துவிடாது உன்னை வாயார வாழ்த்திடுவோமே...

நாவில் நலம்சொல்லி நயமான நல்சொல்லில் நலமாக வாழ்த்திடுவோம் ..

புன்னகை பூத்துநின்றாய் புதுமலராய் மலர்ந்து நின்றாய் .....
காணும் யாவரையும் கண்ணுக்குள் அணைத்து நின்றாய் ....
உறவுக்கு பாலம் போட்டு உறவுதனை வளர்த்து நின்றாய் ...

பாசங்கள் நேசங்கள் கோபங்கள் தாகங்கள் .......
பஹிர்ந்துகொள்ளும் புத்தகமாய் ......
எம்மோடு வாழ்ந்து நின்றாய் ....

எம் கனவுகள் கற்பனைகள் வளர்த்தெடுக்கும் நண்பனாயும்...
பல உருவம் எடுத்து நின்றாய் ....

ஆகா ...உன்னை .....வாழ்த்த ......
கவிமலர் வார்த்தை கொண்டு அழகாக வாழ்த்திடுவோமே ...
வாழிய வாழியவென ...உன் பாலம் தொடர்ந்திட தொடர்ந்து வாழ்த்திடுவோம் ...!!

No comments:

Post a Comment