அடியே ..சகியே .....!
அடியே ..சகியே .....!
உனக்காடி கலியாணம் ..
இலவயசுக்காரிஎன்று...
உன்னைநான் எண்ணி இருக்க...
இலகுவாக தலையை நீட்ட.....
எப்படி நீ சம்மதித்தாய் ..
சொல்லேண்டி என்சகியே..!
எனக்கு கலியாணம் ..
என்று மடல் அனுப்பிய நீ ....
எந்த நாட்டுக்காரன் என்று ...
என்ரீ நீ எழுதவில்லை ...
என்றாலும் புரிந்ததடி ..
வெளிநாட்டுக்காரநென்று....
சரியாடி என் சகியே......!
கனடாக்காரனா .....?அப்போ ..
உன் கொப்பன் செத்தானடி ....
50 லட்சமென்று கூவியே கேட்டிருப்பான் ...அப்போ ..
உன் கொப்பர் யாரிடம் கடன் கேப்பான் ...
சொல்வாயா என் சகியே ....!
20 லட்சமென்று ..
ஜெர்மனியில் இருப்பவனும் ..
சுவிசுக்குப் போனவனும் ..
பிரான்சில் குடிகொண்டவனும் ..
கேட்டுத்தொலைப்பானே....
உன்கொப்பர் தன் தலையை ..
யாரிடம் அடகு வைத்தான் ...
சொல்லித்தொலையாயோ.....
என் அன்பு சகியே ....!
லண்டனில் இருப்பவன்..
இங்கிலீசு பேசுவானாம்...
இவன் கொப்பன் ..இதை சொல்லி ..
நிறையவே புடுங்கியிருப்பான் ...
உண்மை இதுவென்று ....
டக்கென்று சொல்லிவிடு ..
என் பிரிய சகியே .....!
அமெரிக்கக்காரன் எண்டால் ...
சொல்லவே வேண்டாம் ...
உன் கொப்பன் கோவணத்தையும்...
சேர்த்து உருவி இருப்பர் .
இவர்கள் கோவணத்தை...
நாயும் புடுங்கா காலம்தான் ..வராதாடி ..
என் இனிய சகியே .....!
படிக்காதே ..வீட்டிலிரு ..
படிப்பிக்கும் காசுதனை ..
சீதனமாய் ..சேர்க்கவேணும் ..
கொம்மா ..சொல்லியும் ..
ஏன்ரி.. நீ...படித்தாய் ...
படித்தும் என்ன பயன் ...
பல லகரம் கொடுத்துதானே ..
பதுமையாகப் போறாய் நீ ..
என் அன்பு சகியே .....!
ஊரில் இல்லையாடி ..
உனக்கேத்த மணவாளன் ..
வெளிநாடு போக பணமாக கொடுவென்று ..
உங்குள்ளவனும் சொல்லி இருப்பான் ..
உன் அன்புக் கொப்பரிடம் ...
அப்படித்தான் இல்லாவிடின் ..
உன் கொப்பர் பணத்தை ..
திண்டே தீர்திடுவான் ..
உன் வீட்டுத்தின்னையிலே ...
சரிதானே என் சகியே .....!
வயிறு பற்றுதடி ...
நாசமாய் போறவங்களை ..
பல தடவை நினைத்துவிட்டால் ..
படிப்பதற்கும் காசில்லை ..
தின்பதற்கும் வழியில்லை ..
இவர்களுக்கு கொடுப்பதற்கு ..
எங்கேயடி நாம் போவோம் ..
பொறுக்காது சொன்னேண்டி ....
பொறுப்பாயா என்சகியே .....
நன்றியுடன் ..
B . R . ரஞ்ஜனி...!
பதிப்பு :(சுவடு 1993 ,ஈழநாடு பாரீஸ் ,யதார்த்தம் )
No comments:
Post a Comment