தமிழ் மகளே ....!!!
எனக்கு தனிமை வேண்டும் .....அங்கே ...!!
என் ஆசைதீர அவளை ..அள்ளி ...நான் ..
அணைக்க வேண்டும் .
என் தாயகம் செல்ல வேண்டும் .....!அங்கே ...!
என் கவலை தீர .....அவளை ...
எண்ணி அழ வேண்டும் .
என்னவளே ...!!
என்னருகில் ...நீ ...வரவேண்டும் ....!!
எந்நாளும் உன்னை கவியாக்கி ....நான் ..!!
மகிழ வேண்டும் .
பூமகளே ....!
பலமுறை ..நீ ..!!மலரவேண்டும் ..
எந்நாளும் உன்னை ..நான்
என் தலையில் சூடவேண்டும் .
மழைமகளே .....அழகா நீ ...!!
பொழிய வேண்டும் ...
தினமும் அதில் நான் ..
நனைந்து குளிக்க வேண்டும் .
என்னவளே ...அழகிய தமிழ்மகளே ....!!!
என்னோடு ..நீ ..!! வாழவேண்டும் ..
உன்னினைவோடு ..ஒருநாள் ..!
இறக்கவேண்டும்......!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment