போதுமடா சாமி ....உலகம் புரிந்தது......!
பிறந்தவுடன் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ....?
தவழும்போதும் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ...?
நடக்கும் போதும் பார்த்தேன்...உலகம் புரியவில்லை ...?
படிக்கும்போதும் பார்த்தேன் ..உலகம் புரியவில்லை ...?
ஆனால் ....................!!
வாழும்போது மட்டும் உலகம் புரிந்தது ...
பாசம் என்று சொல்லி பாசாங்கு செய்திடுவார் ...
நேசம் என்று சொல்லி நெஞ்சத்தே குத்திடுவார் ...
காதல் என்று சொல்லி காமத்தே நின்றிடுவார் ...
வாசம் என்று சொல்லி வாழ்வினிலே துவண்டிடுவர் ..
போதுமடா சாமி ....உலகம் புரிந்தது......!
No comments:
Post a Comment