Tuesday, 28 June 2011

கலிகால கோலங்கள் ...!!!

கலிகால கோலங்கள் ...!!!

காலத்தின் கோலத்தில் கலிகால கோலங்கள் ...
வீணான கனவு கண்டு வீணாகிப் போறவங்கள் ...
நாளைய விடியல் யாதென்று கேட்பவர்கள் ...
இங்கே.....!!! இங்கே ...!!!

பள்ளி செல்வது பகட்டாக மாறுவதும் ...
பருவத்து தேடல்கள் ..பசியாகிப் போனதுவும் ..
யவ்வனத்து கணவுதனை வீணாகி விட்டதுவும் ...
இங்கே ...!!! இங்கே ...!!!

சிங்கார சினுங்கள்கள் சிலிர்த்திடும் யவ்வனங்கள் ....
மெருகூட்டி வளர்த்தெடுக்கும் புதுமையான நாகரீகம் ...
கண்டறியா சட்டத்தை புதுமையாகப் போற்றுகின்ற ...
வாழை இளம் குமரிகள் ..புதுமை மிகு பெண்டிர்கள் ...
இங்கே.....!!! இங்கே....!!!

பிள்ளை பெறுதலை சாதனை என்பதுவும் .....
அப்பன் ஆகுதல் அதைவிட பெருமை என்றும் ...
சொத்தோடு சுகம் சேர்த்தல் ..
தன் தலையான கடமை என்று .......
பலமுறை கூவிடும் குடும்பத்து தலைவனிவன் ...
இங்கே ...!!! இங்கே...!!!

முக்குதல் முனகுதல் பூசுதல் பேசுதல் ....
குடும்பத்து தலைவிக்கு அன்றாட வேலையிது....
பிள்ளை பெறுவது மறுஜென்மம் எடுப்பதுவாம் .....
பிள்ளை பெறும் சாதனையை ....
நாயும்கூட இலகுவாக செய்துவிடும் .....
இங்கே..!!! இங்கே...!!!

சமுதாய சீர்கேடு கலாச்சார சீரழிவு ......
பட்டிமன்றம் போட்டு பலவாறு வாதிடுவர் ....
சமுதாய சீர்திருத்தம் மறுமலர்ச்சி கதைகளெல்லாம் ....
அழகழகாய் சொல்லிடுவார் ......
மேடைப்பேச்சு ....??? பேச்சோடு ...போய்விடும் ....
இங்கே ...!!! இங்கே ....!!!

என்னிந்த முரண்பாடு ......???.இங்கே .....???
நாளைய விடியலில் காணாது போவோமா........????????

No comments:

Post a Comment