செந்தமிழ் ஓடையில் எம் சித்தனை ஓடவிட்டு ..
சந்தக்கவி ஆற்றினில் தமிழ் மொழி நனையவிட்டு ..
சகோதரர்கள் நாம் ஆர்பரிக்கும் நேரமிது ......
தூயதமிழ் பேசிடவும் ..
தமிழ் மரபை பேணிடவும்..
தமிழோடு கூடிநின்று தமிழிசை பாடும்..
அழகான மிக ஆனந்தமான நேரமிது .
வாழ்க என்ற முழக்கத்துடன் ...
வார்த்தைகூட்டி..மங்களம் பேசி ..
பைந்தமிழ் சேர்த்து கவிபல பாடி..
அண்டை நாட்டில் எம்மொழி காத்து ...
நலியும்தமிலை தேறுதல் படுத்தி ......
விழுகின்ற தமிழுக்கு கைகொடுத்துதவி ..
கட்டை ஒன்றினால் முட்டுக்கொடுத்து ..
தமிழை பேணிடவும்..வளர்த்திடவும் ..
தமிழர் நாம் ஒன்றினைவோம் ...வென்றிடுவோம் ..
எம்தமிழை காத்திடுவோம் ....
வாழ்க தமிழ் ..வளர்க என்றென்றும் .......
நீடூழி...!! நீடூழி!!
No comments:
Post a Comment