Tuesday, 28 June 2011

வஞ்சி .....!!!!

வஞ்சி என்னை கொஞ்சி அள்ளி வதனங்களில் லயித்து ...!
கஞ்சமின்றி முத்தங்கள் கன்னத்தில் தந்தே ....!
கொஞ்சுமொழி பேசிடவே ...முகம் சிவந்து ...நானும் .. !
நாணப்பிஞ்சென்று நீ..என்னை சீண்டுவதில் இன்பம் .....!
என் .....!
மெல்இடையில் கைவைத்துமென்மையுடன் நீ அணைத்து....
மெல்லெனவே நம் இருவர் ... முகங்களுமே நெருங்க ....!
சொல்லென்னா பலகோடி சுகங்களினை கண்டு ....!
எல்லை இல்லா உன் அழகை ..... ரசிப்பதில் இன்பம் ...!
நீ ...!
தேன் சொட்டும் மலரினிலே தேன்வண்டு மொய்த்தல்போல்.....!
எனை சுவைத்தே இருக்க ......உன் .....!
அசைவினில் நானும் மயங்கி ...!
என்றென்றும் உன் அழகை எண்ணுவதில் இன்பம்
உன் ...!
ராஜநடை பயிலும் அந்த அழகினை நானும் ரசித்து....!
எழில் வீசும் அழகினிலே என்னிலை நானும் மறந்து .....!
நீ மொழிகின்ற கவிகளிலே தினம் தினம் என்னை தொலைத்து ..!
ஆனந்தம் காண்பதிலேயே இன்பம் ....அடைகின்றேன்

No comments:

Post a Comment