Tuesday, 28 June 2011

மௌனம் .....????

மௌனம் .....????

மௌனம் ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை ..நாம் வாய் திறந்து பேசவில்லையே தவிர ..
மௌனம் நடத்துகின்ற போராட்டமானது உன்னையே திருப்பி போட்டுவிடும் ..ஆகா ....!!
மௌனமாக இருப்பது என்பதே நாம் போடுஹின்ர வேசம்தான்...
அதாவது வெளி உலகிற்கு தெரிவது.. நாம் மௌனமாக இருக்கின்றோம் ..
இந்த மௌனம் நடத்துகின்ற போராட்டத்தில் நாம் தோற்றுபோவதுதான் உண்மை ...

என்னைபொருத்தவரை மௌனம் இயலாமையின் வடிவம் ..
உனக்கு தெரியுமா ....??? மௌனம் உன்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கும் ..

என்னை அழவிடுங்கள்....என் மௌனங்கள் கலைக்கப்படலாம் ...
அது உள்ளே என்னை... என் உணர்வை தகர்த்தெறிகின்றது ..
உள்ளே நடத்துகின்ற போராட்டத்தில் வாய் பேசாது ஊமை ஆகிப்போகின்றேன்.

நாம் தூங்கும்முன்னே ..வந்து விடியு முன் போவதுகூட மௌனமாகிப்போன நனவுகளின் கனவுதான் ..
மௌனம் சொல்லாமல் சொல்லும் ..கொள்ளாமலே கொல்லும்..பேசாமலே பேசும் ...

நாம் வாயால் பேசுகின்ற பாசை சிலவேளை மௌனமாகி போகும் ஆனால் .....
மௌனம் பேசுகின்ற பாசையோ ....ஒருநாளும் மௌனமாகிப் போகாது ...!!!

No comments:

Post a Comment