Tuesday, 28 June 2011

காதல் ....!!!

வாடல் துளியின்றி வளர்ந்து விட்ட காதல் ..
ஊடல் துளிவந்து மறந்து விட்ட காதல் ....
சாதல் காட்டாது தளிர்த்து விட்ட காதல் ..
கூடல் துளிர்விட்டு துவண்டு விட்ட காதல் ...

ஆடவர் பெண்கள் நயந்து வியக்கும் காதல் ....!!!
ஆசை விஞ்சி அழகிழந்து போனதுவோ ...?

காணக் கவியசைவில் கண்கொள்ளா காதல் ..
காமுக பார்வையிலே அடிபட்டு போனதுவோ ...??

பூவை இவள் என்பான் .....பாவை அவள் என்பான் ....!!
சூரியன் இவன் என்பாள்... சோதிடனும் இவன் என்பாள் ...!!

காலத்து வேகத்தில் கக்கிவிடும் வார்த்தைகள் ...
காலச்சருக்களில் காணாது போய்விடுமோ ...??

சொன்னது பொய்யோ ...?? சொல்லாதது மெய்யோ...??
காலத்தின் பக்கம் பதில் தேடி தரவேண்டும் ....???????????????

No comments:

Post a Comment