by Ranjani Bala on Tuesday, June 22, 2010 at 12:13am
அழகு இளமையில் மட்டுமல்ல ....!!!
நேற்றையதினம் அந்திபொழுது நேரம் ..அழகான மஞ்சள் வெயில் ..நான் எனது வாகனத்தில் .வீடு நோக்கி
வந்துகொண்டிருந்தேன் .அருகே வந்துகொண்டிருந்த வண்டி ஒன்றில் ஒரு வயோதிப மாது ..எழுபத்தி ஐந்து வயதிருக்கும் ,அழகான மாது ஆசிய நாட்டை சேர்ந்தவர் ..நேர்த்தியான நாசி அழகான அதரங்கள்
முடியை கழுத்தோடு வெட்டியியிருந்தார்.மிகவும் கவர்சிகரமான முகவாகு ..சேலை அணிந்திருந்தார் ..
மிக நேர்த்தியாக வாகனத்தை செலுத்தினார்.கைகளில் சிறு தளர்ச்சி இருந்தாலும் வாகனம் ஓடுவதில் நடுக்கம் இல்லை .
இத்தனையும் பக்கத்தில் இருந்தபடி பாத்துக்கொண்டு வந்தேன் ..அவர் வாகனம் செலுத்துகின்ற வேகத்தோடு நானும் சேர்ந்து அதே வேகத்தில் ...
அந்த முதாட்டி இடை இடையே முகம் பார்கும் கண்ணாடியில் தன்முகத்தை பார்த்து அழகு பார்த்தார் ..
அந்த அழகு எனக்கு ரொம்பவே பிடித்தது ...இரண்டு கன்னங்களையும் திருப்பிபார்த்தார் ..அதரங்களை தொட்டு பார்த்தார் , அழகாக இருந்தது ..என்னோ ஒரு நம்பிக்கை அந்த மூதாட்டிக்கு அழகு தான் என்பதில் அசைக்க முடியா
நம்பிக்கை என்று நான் நினைக்கின்றேன் ,,,
அவரின் செய்கை எனக்கு அதைத்தான் நினைவுக்கு கொண்டுவந்தது .நாம் எமக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அழகு போய்விடுமா ..? என்று பலநேரம் பயந்துவிடுவோம் ..அனால் இவரை பார்த்தபின்பு நினைத்தேன் ..அழகு என்பது வயதில் அல்ல நாம் செய்கின்ற செயலில் இருக்கின்றது என்று ...
இத்தனைக்கும் அவருக்கு தெரியா தன்னை நான் பார்த்தேன் என்று ....பத்து நிமிடங்கள் இருக்கும்
என் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தார் ...அவரை அறியாமலே அவரின் அழகில் நன் மலைத்து விட்டேன் ..இத்தனைக்கும் இடையில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்தார் என்று நினைக்கின்றேன் ..மெதுவாக தலை அசைத்து ரசித்ததை காண கூடியதாக இருந்தது ..எதோ ஒன்று அந்த பாட்டியிடம் என்னை ஈர்த்து கொண்டதுதான் உண்மை
இத்தனை வயதில் எமது ஆசிய மாதர் தங்களால் ஒன்றும் முடியாது என்று ஒதுங்கிக்கொள்ளும் இடத்தில் இவரின் திறமை என்னை கவர்ந்து கொண்டதில் வியப்பில்லை எனலாம் ..
ஆக இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளனும் என்ற அவாவில் ..இங்கே தந்துள்ளேன் ..
நன்றியுடன் ..
B . R . ரஞ்சனி .
No comments:
Post a Comment