தாயா .....? தாரமா...?
உன்னை ....!
தன்னுள் சுமந்தவள் தாய் என்றால் ....!
உன்னை ...!
தன் நெஞ்சினுள் சுமப்பவள் தாரம் .
கருவறையில் உன்னை ...சுமந்தவள் தாய் என்றால் ..!
அந்த கருவறைக்குள் உன் உயிரை சுமப்பவள் தாரம் .
பாசத்தை தந்தவள் தாய் என்றால் ...!
பாசத்தோடு நேசத்தையும் தருபவள் தாரம்.
உதிரத்தை பாலாக்கித் தந்தவள் தாய் என்றால் ...!
அந்த உதிரத்தை உயிராக்கி தருபவள் தாரம் .
தன் மடியை தந்தவள் தாய் என்றால் ..!
தன் தோளைத் தந்தவள் தாரம் .
No comments:
Post a Comment