Tuesday, 28 June 2011

நீயும் நானும்கூடத்தான்!!!...

உன் கண்ணுக்குள் அசையும் கருமணிக்குள்....
என் கற்பனைகள் கரைகின்றன ...!!
கற்பனைகள் மட்டுமா.....????
நானும்கூடத்தான்...............

உன் பார்வையில் தெரிகின்ற கவிதையில் ...
என் கனவுகள் அடிபட்டு போகின்றன ....!!
கனவுகள் மட்டுமா ..???
நானும்கூடத்தான்...............

நீ விடுகின்ற சுவாசபெரும்மூச்சில்...
என் மனக்கோட்டைகள் மண் கவ்வுகின்றன ....
மனகோட்டைகள் மட்டுமா ..???
நானும்கூடத்தான்...............

உன் உதடுகள் அசைக்கும் உச்சரிப்பில் ....
என்கவிகள் கானம் இசைகின்றன....!!!
கானம் மட்டுமா .....???
நானும்கூடத்தான்...............

நீ என்னை அணைக்கும்போதெல்லாம்...
என் உள்ளம் உவகை ஊற்றால் மகிழ்கின்றன ..!!!
அவைமட்டுமா ....???
நானும்கூடத்தான் ...

நீ என்னை உன்னுள் சிறைபடுத்தும்போது ....
நம் இதயங்கள் காணமல் போகின்றன ....?
இதயங்கள் மட்டுமா ...???
நீயும் நானும்கூடத்தான்!!!...

2 comments: