Tuesday, 28 June 2011

கருத்து வேறுபாடுகளால் கற்பழிக்கப்படும் நட்பு.........

கவிச்சமரில் தொடங்கி கருத்துச்சமரில் முடிந்து போன ஒரு நட்பை பற்றி இன்று பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் பின்னிய கவி வலையில் அவள் இதயமும், அவள் பின்னிய கவி வலையில் என் இதயமும் சிக்கிக்கொண்டது. எம் கவி உரசலில் கருத்தரித்த உயிருக்கு நட்பு என்று பெயர் சூட்டினோம்.

முகப்புத்தகத்தின் (Facebook) பக்கங்களில் நம் நட்பு வேர்விட்டது. நாளாக நாளாக "உங்கள் சிசுவுக்கு 'நட்பு' என்ற பெயர் பொருத்தமில்லை; 'அறிமுகம்' என்பதே பொருத்தமாக இருக்கும்" என்று என் இதயம் முனங்கத்தொடங்கியது.அதற்கும
் காரணம் இல்லாமலில்லை.

முதல் காரணம்:

தேநீருக்காக தான் சர்க்கரை; சர்க்கரைக்காக வேண்டி யாரும் தேநீர் குடிப்பதில்லை. அதே போல சந்தர்ப்பத்துக்கு தான் கவிதை; கவிதைகளுக்காகவே சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சர்க்கரையை போல் தொட்டுக்கொல்வதட்காக தான் கவிதை வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

கவியரசு கண்ணதாசன் கூட முதல் இரவில் மனைவியிடம் கவிதை சொல்லப்போயிருந்தால் மறுநாள் மனைவி மூட்டை முடிச்சோடு வீடு திரும்பியிருப்பாள்.

ஆனால், என் தோழியின் கருத்தோ வேறுபட்டதாக இருந்தது.

இணையத்தில் இணைப்பை ஏற்படுத்தும் போது கூட "Hi" என்ற வார்த்தைக்கு பதிலாய் கூட ஒரு கவிதை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பாள்.

இரண்டாவது காரணம்:

கவிதை எழுதுபவன் கவிஞன் என்று அகராதி விளக்கம் தரலாம். என்றாலும் கவிதை எழுத தொடங்கும் எல்லோரும் தன்னை "கவிஞன்" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை கவிப்பிரியன் என்று அறிமுகப்ப்டுத்திகொல்வதிலே தான் நான் பெருமை அடைகிறேன்.

கவிஞனுக்கு தன்னடக்கம் இருக்க வேண்டும். (இங்கு நான் கவிஞன் என்று சொன்னது கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் என்ற போர்வையில்)

"நான் நல்ல கவிதை எழுதுவேன்டா!"

"என் கவிதையை எல்லாரும் ரசிக்கிறாங்க!"

என்று அவள் உதடுகள் அடிக்கடி முனுமுனுப்பதில் எனக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவள் நல்ல கவிதைகள் எழுதுவாள். என்றாலும் அந்த அழகினை ரசிப்பதை விட்டும் அவளின் "தற்பெருமை" என்னை தூரமாக்க தொடங்கியது.


கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லும் உரிமை அதை எழுதிய கவிஞனுக்கு கிடையாது... வாசகனே அதை சொல்ல வேண்டும். இதுவே என் கருத்தாக இருக்கிறது.

கருத்து முரண்பாடுகளில் எம் உறவு கற்பிழந்து விட்டது என்றே நான் எண்ணுகிறேன். நான் பிழையா? என் கருத்துகள் பிழையா? உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்



நண்பா ..!

கற்பை கவியோடு ஒப்புடு ...ஏற்றுக்கொள்கின்றேன் ...ஆனால் .. நட்பு அது அழகான கவிதை
அதனை மறந்தும் கற்பழிப்பு என்று கொச்சப்படுத்திவிடாதே .....! நீ அவளை பற்றி எழுதுகின்றாய் என்று சொல்லி அவள் உணர்வையே உன் வார்த்தைகளாலேயே காயப்படுத்திவிட்டாய் ....அவளுக்காக நான் பரிதாபப்படுகின்றேன் ..
நட்பை கற்பழிப்புக்கு ஒப்புடுவதா .....? உன்வாததில் நான் முரண்படுகின்றேன் ....!நட்பில் பல முரண்பாடுகள் வரலாம் ..அதற்காக ...விலைமதிக்கமுடியா கற்பை உதாரணம் காட்டுவது சரியல்ல ....! ஆண்களுக்கு கற்பழிப்பு என்பது சுலபமான வார்த்தை அனால் பெண்ணுக்கோ அவள் குரல்வளையையே நொறுக்கி சாகடிக்கும் நெருப்புத்துண்டங்கள் .
நீங்கள் இருவரும் பின்னிய கவிவலையில் சிக்குண்டது சரிதான் ...அனால் அதற்கு அழகான நட்பை பெயராக சூட்டிவிட்டு கருத்து வேறுபாடுக்காக அவள் மேலேயே குற்றம் சாடுவதா ..?
உங்கள் நட்பை முதல் முதலாக தெரியப்படுத்தத்தான் அறிமுகம் எனும் முகவரி தேவை .இந்த முகவரி என்பதே மனிதர்கள் ஏற்படுத்திய கலாச்சார பண்பாடு என்னை நீயும் உன்னை நானும் அறிந்துகொள்ள உதவுகின்ற கலாச்சார முகவரி அறிமுகப்படலம் .
உங்கள் நட்பு கவிதையால் ஏற்பட்ட நட்பு இதிலே அவள் எப்போதும் கவிதையை எதிர்பார்ப்பதில் தப்பில்லையே ...?
உன் கவிதை பிடித்ததாலேயே உன்னை அவளுக்கு பிடித்தது என நினைக்கின்றேன்.
இப்போ உன் காரணங்களுக்கு விளக்கம் தரலாம் என நினைக்கின்றேன் ..தவறா இருந்தால் மன்னித்துவிடு..கருத்துசுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பாய் என நினைக்கின்றேன் ...
நன்றி .....
காரணம் 1 : சக்கரைகாக தேநீர் குடிப்பதில்லை ..ஆனால் ..அந்த தேநீருக்கு சுவையூட்ட இங்கே சக்கரை வேண்டி இருக்கின்றது என்றால் அதுதான் உண்மை . இப்போ நாம் சக்கரை இருந்தால்தான் தேநீரே போடுகின்றோம் ..இது காலவேகத்தில் மாறிப்போன ஒன்று ...!
அடுத்து கண்ணதாசனை உனக்காக உதவிக்கு அழைத்திருக்காய்....உனக்குத்தெரியுமா கண்ணதாசன் என்றாலே
எமக்கு நினைவுக்கு வருவது அவன் கவிதைதான் ...!நீ அவனை முழுமையாக அறிந்திருக்கவில்லைபோலும்
அவனே சொல்லி இருக்கான் ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று ...அவன் எந்த செயல செய்வதென்றாலும் கவியுடந்தான் செய்வான் .

உனக்கு தெரியுமா ...?பெண்கள் எப்போதும் தங்கள் கணவன் தன்னைப்பற்றி வர்ணிப்பதை மிகவும் விரும்புவாள் ..
கவிதை தெரிந்தவன் முதல் இரவில் அவளோடு உணர்வுகளை பஹிர்ந்துகொள்ள கவிதையை துணைக்கு அழைப்பான்..இதற்கு நீ பெண்ணாக பிறந்திருக்கவேண்டும் நண்பா ...!
காரணம் 2 : உனக்கு கவிதை எழுதி அதற்கு முகவரியும் கொடுக்கத்தெரிகின்றது...அதனை அடையாளம் காட்டவும் தெரிகின்றது ..அது உன் உரிமை உனக்கே உரித்தானது ...நீ உனக்காக எழுதினாலும் உன் உள்ளம் சொல்வதுதான் என்ன ..?உன்கவிதை அதனை மற்றவர்கள் பார்த்து ரசிக்கவேண்டும் என்றுதானே அவர்கள் பார்த்து விமர்சிப்பதால்தானே இந்த கவிஞன் வாழுகின்றான் .

சிலவேளை ..நீ கூறிய இந்த பெண் தன் மீது தன்கவிதை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருக்கலாம் ..தன்னை நீ நன்றாக புரிந்திருப்பாய் தனைப்பற்றி அறிந்திருப்பாய் என்பதால்தான் என்னவோ ..உன்னிடம் இப்படி சொல்லி இருக்கலாம்..
நீ இங்கே நல்ல நட்பையே கொச்சைப்படுத்தும் கற்பு இழப்பு என்ற நெருப்புத்துண்ட வார்த்தை அவளை அவள் உணர்வை அவள் மன அடிவரை சென்று ரணப்படுத்தும் என்று கவிஞான உனக்கு புரிந்திருக்குமா என்ன ....?
நண்பா...! நட்பு புனிதமானது அதில் விரிசல்கள் பல வரலாம் ..அவளை நீ புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் ..
கவிஞன் எப்போ நான் என்ற போர்வையில் இருந்து விலகுறானோ அப்போதே அவனால் தரமான கவிதை கொடுக்கமுடியாது என நான் நினைக்கின்றேன் .

நீ ஆணாக இருப்பதால்தான் அவளை அவளின் அன்பான நட்பை பெரிய வார்த்தை கொண்டு அவள் உள்ளத்தை தகர்த்து எரிந்திருக்குறாய்..
ஒரு வேளை நீ அவளாக இருந்திருந்தால் பெண்மையும் ..நட்பும் புனிதமானதென்று புரிந்திருப்பாயோ என்னவோ ..?

இதில் எழுதியவை உன் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்திவிடு .....கருத்துசுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பாய் என நினைக்கின்றேன் ...
நன்றி .....

B. R .Ranjani

Ranjani!

"கருத்து வேறுபாடுகளால் கற்பழிக்கப்படும் கற்பு" இந்த தலைப்பையே நீங்கள் தலை கீழாக பிருந்து கொண்டிருப்பது கவலைக்கிடமானது.

"ஒரு பெண் ஒரு ஆடவினால் தன் விருப்பத்துக்கு மாறாக தன் கன்னித்தன்மையை இழத்தல்" இதுவே நீங்கள் விளங்கி கொண்டிருக்கும் கற்பழிப்பு. எனினும் கற்பு என்ற சொல்லுக்கு என் விளக்கம் வித்தியாசமானது.

'கற்பு' என்பது 'நெறி' அல்லது 'முறைமை' என்றும் பொருள்படும். கட்பிலத்தல் என்பது 'நெறி தவறுதல்' அல்லது 'முறை தவருதலாகும்'....

எனவே விலை மதிப்பில்லாத பெண்ணின் கற்பை நான் கொச்சை படுத்தவில்லை என்பதை தமிழறிந்த உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஆச்சரியமே!

"சக்கரைகாக தேநீர் குடிப்பதில்லை ..ஆனால் ..அந்த தேநீருக்கு சுவையூட்ட இங்கே சக்கரை வேண்டி இருக்கின்றது என்றால் அதுதான் உண்மை "
ஆம் அதை நான் ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை....

"தேநீருக்காக தான் சர்க்கரை; சர்க்கரைக்காக வேண்டி யாரும் தேநீர் குடிப்பதில்லை. அதே போல சந்தர்ப்பத்துக்கு தான் கவிதை; கவிதைகளுக்காகவே சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சர்க்கரையை போல் தொட்டுக்கொல்வதட்காக தான் கவிதை வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்."
... See more
இது உங்களுக்கு புரியவில்லை...
தேநீருக்கு சர்க்கரை போடாமல் ஒரு முறை "ஒரு கோப்பை சர்க்கரைக்கு ஒரு துளி தேநீரை ஊற்றி அருந்தி பாருங்கள்...

நான் என்ன சொன்னேன் என்பது உங்களுக்கு புரியும்

"அடுத்து கண்ணதாசனை உனக்காக உதவிக்கு அழைத்திருக்காய்....உனக்குத தெரியுமா கண்ணதாசன் என்றாலே... எமக்கு நினைவுக்கு வருவது அவன் கவிதைதான் ...!நீ அவனை முழுமையாக அறிந்திருக்கவில்லைபோலும் அவனே சொல்லி இருக்கான் ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று ...அவன் எந்த செயல செய்வதென்றாலும் கவியுடந்தான் செய்வான்"

நான் கண்ணதாசனை உதவிட்கு கூப்பிடவில்லை.... காரணம் கண்ணதாசன் கவியரசாக இருந்தாலும் என் மனதில் இருப்பதை சொல்வதற்கு கண்ணதாசனை விட நானே தகுதியுடையவன்.

கண்ணதாசன் சொன்னது "ஒரு கையில் மதுவையும் மறுகையில் மாதுவையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகும் அதுவரை நானும் போவேன் என்று தானே தவிர ".... "ஒரு கையில் எழுதுகோலையும் மறுகையில் கவிதையையும் வைத்திருந்தால் உலகம் எதுவரை போகுமோ அதுவரை நானும் போவேன் என்று சொல்லவில்லை.

"உனக்கு கவிதை எழுதி அதற்கு முகவரியும் கொடுக்கத்தெரிகின்றது...அதனை அடையாளம் காட்டவும் தெரிகின்றது ..அது உன் உரிமை உனக்கே உரித்தானது ...நீ உனக்காக எழுதினாலும் உன் உள்ளம் சொல்வதுதான் என்ன ..?உன்கவிதை அதனை மற்றவர்கள் பார்த்து ரசிக்கவேண்டும் என்றுதானே அவர்கள் பார்த்து விமர்சிப்பதால்தானே இந்த கவிஞன் வாழுகின்றான் .

சிலவேளை ..நீ கூறிய இந்த பெண் தன் மீது தன்கவிதை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருக்கலாம் ..தன்னை நீ நன்றாக புரிந்திருப்பாய் தனைப்பற்றி அறிந்திருப்பாய் என்பதால்தான் என்னவோ ..உன்னிடம் இப்படி சொல்லி இருக்கலாம்.."

நிச்சயமாக இதை நான் மறுக்கிறேன்... நான் கவிதை எழுதுவதற்கு சந்தர்ப்பம் தேடியது கிடையாது. மற்றவர்களின் பாராட்டுக்காக கவிதை எழுதுவதும் இல்லை. கவிதை என் தோழன். என் ஆதங்கங்களை... என் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்துகிறேன்.... See more... See more

நிச்சயமாக மற்றவர்களின் விமர்சனத்தில் தான் உயிர் வாழ்கிறது. என் நடத்தைகளிளோ, என் கவிதைகளிலோ பிழைகள் இருந்தால் விமர்சிப்பதை தான் நான் விரும்புவேன். நான் நண்பர்களுக்கு என் கவிதைகளை அறிமுகப்படுத்துவேன். ஆனால் அதை நான் விமர்சிப்பது கிடையாது. அவர்கள் பிழையான கருத்தை சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது....

ஆனால் துரதிஷ்டவசமாக என் தோழிக்கு விமர்சனங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை இல்லை.

காயப்படுத்துகிறேன்.... கொச்சைபடுத்துகிறேன் என்று கூறி எரிந்து விழுவதற்கு முதல் "எனது பிழை என்ன என்று அவள் யோசித்து இருப்பாளேயானால் நட்பு இப்போது கூட கற்போடு இருந்திருக்கும்

No comments:

Post a Comment